ராஃபிள்ஸ் லங்குர் என்ற அந்தக் குரங்கு இனத்தைச் சேர்ந்த கடைசி குரங்கு 1987ல் இறந்தது. ஆயினும் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதியின்போது ஒரு லங்குரை தேசிய பூங்காக் கழகம் கண்டுபிடித்து புகைப்படம் எடுத்தது. டெய்ரி பார்ம் இயற்கைப் பூங்காவில் அந்தக் குரங்கு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த இயற்கை பூங்கா, புக்கிட் தீமா இயற்கைக் காப்பகத்திற்கு அருகே உள்ளது. தேசிய பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியான் இயற்கை வரலாறு காட்சியகத்தின் இணையத்தளத்தில் பூங்காக்கழகம் குரங்கு காணப்பட்டது பற்றிய தகவலை வெளியிட்டது.
'ஃபிள்ஸ் பேண்டட் லங்குர்' குரங்கு சிங்கப்பூரில் மிக அரிது. வனப்பகுதிகளில் தற்போது கிட்டத்தட்ட 67 லங்குர் குரங்குகள் மட்டும் உள்ளன. சிங்கப்பூரிலும் மலேசிய தீபகற்பத்திலும் மட்டும் இந்தக் குரங்குகள் உள்ளன.