நாய் இனப்பெருக்கம், வம்சவழியாக வரும் பாதகமான குறைபாடுகளை உடைய நாய்கள் இனப்
பெருக்கம் செய்வதற்குத் தடை விதித்தல் போன்ற புதிய விதிகளை 'எனிமல் அண்ட் வெட்ரினரி சர்விஸ்' எனப்படும் விலங்கு மருத்துவ சேவை அமைப்பு அறிமுகப்
படுத்த உள்ளது.
இதற்காக அது பொதுமக்கள் கருத்துகளை வரவேற்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இணையம் வழி இம்மாதம் 31ஆம் ேததிக்குள் தெரிவிக்கலாம்.
தேசிய பூங்காக் கழகத்தின்கீழ் வரும் விலங்கு மருத்துவ சேவை அமைப்பு பற்றிய மறுஆய்வுக்குப் பின் புதிய விதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2019ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆய்வு செல்லப் பிராணி இனப்பெருக்கம், அவற்றின் காப்பகங்கள் ஆகியவற்றை முன்னுரிமை தரவேண்டிய அம்சங்களாக அடையாளம் கண்டது.
இவற்றில் விலங்கு நலன், விலங்கு சுகாதாரம் போன்றவற்றை பாதுகாக்க உரிமம் வழங்கும் தரநிலைகளை உயர்த்த வேண்டும் என இதில் முக்கிய பங்குதாரர்
களாக விளங்குவோர் கூறினர்.
இதன் தொடர்பில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'பிளேட்டினம் டோக்ஸ் கிளப்' என்ற காப்பகத்தில் ஷெட்லேண்ட் ஷீப்டாக் எனப்படும் ஒருவகை நாய் இறந்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இதற்கு மூன்று மாதங்கள் கழித்து, 'போர்ட் அண்ட் பிளே' என்ற காப்பகத்தில் மால்டீஸ் வகை நாய் ஒன்று ெசந்தோசாவில் நீச்சல் சம்பவத்தில் இறந்ததும் இங்கு நிைவுகூரத்தக்கது.
விலங்கு மருத்துவ சேவை அமைப்பின் தொழில், உயிர்பாதுகாப்பு நிர்வாக இயக்குநரான டாக்டர் சுவா ஸி ஹூங், புதிய விதிகள் தற்பொழுது எவ்விதக் கட்டுப்
பாடுகளும் இன்றி செயல்படும் 50 செல்லப் பிராணி நடத்துநர்களை உள்ளடக்கும் என்று கூறியுள்ளார்.
இந்தப் புதிய விதிகள் பூனைகள், மற்ற சிறிய விலங்குகளையும் உள்ளடக்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் சுங்கை தெங்காவில் உள்ள ஐந்து காப்பங்களும் 20 இனப்பெருக்க அமைப்புகள் மட்டுமே விதிமுறைகளுடன் கூடிய உரிமம் பெற்றவை.
நேற்று அறிவிக்கப்பட்ட புதிய விதிகளின்படி, வர்த்கக ரீதியில் செயல்படும் செல்லப் பிராணி வளர்ப்பு அமைப்புகளும், காப்பக நடத்துநர்களும் தினமும் தங்கள் பராமரிப்பில் உள்ள விலங்குகளை பரிசோதனை செய்து, அவை வலியில் இருக்கின்றனவா, காயம், நோய் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் அசாதாரண முறையில் நடந்துகொள்கின்றனவா, என்று கண்டறிய வேண்டும்.
மேலும், இனப்பெருக்கம் செய்வோர், விலங்குகள் தொடர்பாக முறையான தகவல்கள் வைத்திருத்தல், விலங்குகள் தங்க போதுமான இடவசதி, விலங்குகளைக் கையாள்வோருக்கு போதுமான பயிற்சி அளிப்பது போன்ற மற்ற கடுமையான விதிகளும் நேற்று அறிவிக்கப்பட்டன.