'தொடர்ந்து முகக்­க­வ­சம் அணி­வது முக்­கி­யம்'

1 mins read
2f2890b2-aa16-48d8-b3f4-6b122d44dcc4
-

கொவிட்-19னுடன் வாழ்க்­கை­யைத் தொட­ரும் நிலை ஏற்­பட்­டா­லும் தொடர்ந்து முகக்­க­வ­சம் அணி­வது முக்­கி­யம் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார்.

கிரு­மிப் பர­வலை அது தடுக்­கும் என்­றார் அவர்.

கடை­சி­யாக முடி­வுக்கு வரும் கட்­டுப்­பா­டு­களில் முகக்­க­வ­சம் அணி­வ­தும் ஒன்­றாக இருக்­கக்­கூ­டும் என்­றார் அவர்.

முகக்­க­வ­சம் அணி­யத் தேவை­யில்லை என்று அறி­வித்­த­தும் இஸ்­‌ரே­லில் கிரு­மித்­தொற்று பாதிப்பு மோச­ம­டைந்­ததை திரு ஓங் சுட்­டி­னார். அடுத்த பத்து நாட்­களில் முகக்­க­வ­சம் அணி­வதை இஸ்­‌ரேல் கட்­டா­ய­மாக்­கி­யதை அவர் நினை­வூட்­டி­னார்.