பலகாரங்களை விற்கும் ஹோ கீ பாவ் கடைகளுக்கு அவற்றை விநியோகம் செய்யும் நிறுவனத்தின் வளாகம் ஒன்றில் கரப்பான் பூச்சி, எலித் தொல்லை கண்டறியப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து ஹோ கீ பாவின் 12 கிளைகளும் நேற்று மூடப்பட்டன. இது குறித்து ஹோ கீ பாவ் நிறுவனத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தொடர்பு கொண்டபோது, தனது விநியோகிப்பாளரின் வளாகத்தில் சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது கடைகள் அனைத்தும் மூடப்பட்டதாக ஹோ கீ பாவ் கூறியது. பிடோக் நார்த் வட்டாரத்தில் 'எச்கேபி ஃபுட் டெக்னாலஜி' நிறுவன வளாகத்தின் உணவுத் தயாரிப்புப் பகுதியில் கரப்பான் பூச்சி, எலி எச்சங்கள் இருந்ததை சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று முன்தினம் கண்டறிந்தது. எச்கேபி ஃபுட் டெக்னாலஜி நிறுவனத்தின் உணவு செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்த தான் உத்தரவிட்டுள்ளதாக உணவு அமைப்பு தெரிவித்தது.
பலகாரம் விற்கும் கடை மூடல்
1 mins read
-