குடியிருப்புப் பகுதிகளில் புகைபிடிப்பதற்கான பிரத்தியேக இடங்கள் முன்னோட்டச் சோதனை

1 mins read
2585e7ac-67d0-4d39-88b2-b6d85c2310c3
கிளமெண்டியில் உள்ள பொது வீடமைப்புப் பேட்டைகளில் புகைபிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக இடங்களில் ஒன்று. படம்: திமத்தி டேவிட் -

கிள­மெண்­டி­யில் உள்ள பொது வீட­மைப்­புப் பேட்­டை­களில் புகை­பி­டிப்­ப­தற்­கான இரு வேறு மேம்­ப­டுத்­தப்­பட்ட பிரத்­தி­யேக இடங்­களை ஹாலந்து-புக்­கிட் தீமா குழுத்­தொகு­தி­யைச் சேர்ந்த புக்­கிட் தீமா பிரிவு சோதித்­துப் பார்க்­கத் தொடங்­கி­யுள்­ளது.

தேவைக்­கேற்ப கட்டி விற்­கப்­பட்ட (பிடிஓ) கிள­மெண்டி ரிட்­ஜஸ் பேட்­டை­யி­லும் வடி­வ­மைத்து, கட்டி, விற்­பனை செய்­யும் திட்­டத்­தின்­கீழ் கட்­டப்­பட்­டுள்ள டிரி­வே­லிஸ் பேட்­டை­யி­லும் புகை­பி­டிப்­ப­தற்­கான இந்­தப் பிரத்­தி­யேக இடங்­கள் அமைந்­துள்­ளன.

இரு இடங்­க­ளி­லும் புகை­பி­டிப்­ப­வர்­க­ளுக்­காக குளிர்ந்த வச­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இந்த முன்­னோட்­டத் திட்­டம் ஏறக்­கு­றைய ஆறு மாதங்­க­ளுக்கு நீடிக்­கும் என்று புக்­கிட் தீமா தொகுதி அலு­வ­ல­கத்­தைச் சேர்ந்த இயக்­கு­நர் ஏஞ்­சலா வோங், 38, தெரி­வித்­தார்.

புகை­பி­டிப்­ப­தற்­கான இத்­த­கைய பிரத்­தி­யேக இடங்­கள் தொழிற்­சாலை, வணிக வளா­கங்­களில் ஏற்­கெ­னவே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தா­லும், குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் முதன்­மு­றை­யாக இவை பயன்­பாட்­டிற்கு வந்­துள்­ளன.

வெளி­யு­றவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­சர் சிம் ஆன் நேற்று முன்­தி­னம் இந்த இடங்­களைப் பார்­வை­யிட்­டார். கொவிட்-19 கார­ண­மாக மக்­கள் வீட்­டி­லி­ருந்து பணி­பு­ரி­யும் தற்­போ­தைய சூழ­லில், குடி­யி­ருப்­பு­களில் பலர் புகை­பி­டிப்­ப­தால் சிக­ரெட் வாடை வீசு­வ­தாக புக்­கிட் தீமா குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து கூடு­த­லான புகார்­கள் கிடைத்­தி­ருப்­ப­தாக திரு­மதி சிம் ஆன் தெரி­வித்­தார்.

புகை­பி­டிப்­ப­வர்­க­ளின் சௌக­ரி­யத்­திற்­காக இந்­தப் பிரத்­தி­யேக இடங்­கள் வீடு­க­ளுக்கு அருகே அமைக்­கப்­பட்­டுள்­ளன. பகல்­நே­ரத்­தில் வெளி­யில் வெப்­பம் அதி­க­மாக இருக்­கும் என்­ப­தற்­காக குளிர்ந்த வச­தி­கள் ஏற்­ப­டுத்­தித் தரப்­பட்­டுள்­ளன.

கொவிட்-19 பர­வ­லைத் தடுக்க இந்த இடங்­களில் புகை­பி­டிப்­ப­தற்­காக எல்­லை­கள் வரை­ய­றுக்­கப்­பட்டுள்­ளன. இந்த முன்­னோட்­டத் திட்­டத்தை அப்­ப­குதி குடி­யி­ருப்­பாளர்­கள் வர­வேற்­றுள்­ள­னர்.