இனவாத கருத்துகளைத் தெரிவித்ததை காணொளியில் படமெடுக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு 5,000 வெள்ளி பிணை கொடுக்கப்பட்டுள்ளது. மனநலக் கழகத்தில் தடுப்பில் வைக்கப்பட்ட முன்னாள் சொத்து முகவர் 57 வயது டான் பியாவ் ஹியோங்கை வழக்குரைஞர் சிங் கேங் ஹுவாட் நீதிமன்றத்தில் பிரதிநிதிக்கிறார்.
டான், இனவாதம் தொடர்பான காணொளிகளைக்கொண்டுள்ள யூடியுப் ஒளிவழியை வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொது இடத்தில் தொல்லை விளைவித்ததன் பேரிலும் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
தான் இனவாதி அல்ல என்று அவர் ரயிலில் சத்தமாகச் சொல்லினார். ஆனாலும் "நாம் மிகவும் வேறுபட்டவர்கள்," போன்ற வாக்கியங்களையும்சொல்லியிருக்கிறார்.
இவ்வாண்டின் தொடக்கத்தில் பிற பயணிகளிடம் தங்களது இனத்தைப் பற்றி கேட்டுக்கொண்டிருந்ததைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பரவியது. அதனைத் தொடர்ந்து அவர் வேலை பார்த்த 'நைட் பிராங்க்' சொத்து ஆலோசனை நிறுவனம், அவரை பணிநீக்கம் செய்தது.

