ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை
இவ்வாண்டுக்கான தேசிய தினப் பேரணி உரையைப் பிரதமர் லீ சியன் லூங் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்த்துவார் என்று பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்தது.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக கடந்த ஆண்டு தேசிய தினப் பேரணி உரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஆண்டின் மிக முக்கியமான அரசியல் உரையாகக் கருதப் படும் பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை, 1966ல் இருந்து முதல் முறையாகக் கடந்த ஆண்டில்தான் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கதைக்களத்தில் நூல் அறிமுகப் போட்டி
வாசிப்பை ஊக்குவிக்கும் புதிய அங்கமாக நூல் அறிமுகப் போட்டியைக் கதைக்களம் நடத்துகிறது. இதற்கு சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய நூல் ஒன்றுக்கு 140 வார்த்தை களுக்குள் அறிமுகம் ஒன்றை எழுதி அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நூல் அறிமுகத்திற்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். கதைக்களத்தில் எழுத்துத் திறனை மேம்படுத் தும் வகையில், சிறுகதை எழுதும் போட்டி மூன்று பிரிவு களாக இடம்பெற உள்ளது.
பிரிவு 1: மாணவர் பிரிவு (உயர்நிலை வகுப்பு மாண வர்கள்). "அக்கா மட்டும் அன்று எங்களுடன் இல்லை யென்றால் நிலைமை என்னவாகியிருக்கும்?" என்ற தொடக்க வரியில் 200 முதல் 300 வார்த்தைகளுக்குள் சிறுகதையை எழுத வேண்டும்.
பிரிவு 2: இளையர் பிரிவு (தொடக்கக் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும் 18லிருந்து 25 வயது வரை யில் உள்ளோரும்). "யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை என நண்பன் சொன்னதை நான் நம்பியிருக்கலாமா?" என்ற தொடக்க வரியில் 300 முதல் 400 வார்த்தைகளுக்குள் சிறுகதையை எழுத வேண்டும்.
பிரிவு 3: பொதுப் பிரிவு. "சொன்ன மாதிரியே இரண்டு மாதங்களில் அடையாளம் தெரியாத அளவு மாறிவிட்டாரே!" என்ற தொடக்க வரியிலோ அல்லது வேறு தொடக்க வரி யிலோ 400 முதல் 500 வார்த்தைகளுக்குள் சிறுகதையை எழுத வேண்டும்.
மேற்கண்ட படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்னியல் படி வத்தின் வழியாக 23/7/2021 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும். மேல்விவரங்களுக்கு:
http://singaporetamilwriters.com/kathaikalam/
திருவாட்டி கிருத்திகா - kiruthikavirku@gmail.com; திருவாட்டி பிரேமா மகாலிங்கம் - 91696996
மின் ஸ்கூட்டருக்கான எழுத்துத் தேர்வில் 96 விழுக்காட்டினர் தேர்ச்சி
பொது இடங்களில் தங்கள் மின் ஸ்கூட்டரையும் மின் சைக்கிளையும் பயன்படுத்த அனுமதிக்கும் சான்றிதழுக்கான கட்டாயத் தேர்வை எழுதியவர்களில் 96 விழுக்காட்டினர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை 5 மணி வரை தேர்வு எழுதிய 177 பேரில் பெரும்பாலோர் தேர்ச்சி அடைந்து அதற்குரிய சான்றிதழைப் பெற்றுள்ளனர் என்று ஆணையம் கூறியது. இதுவரை 1,900 மின் ஸ்கூட்டர், மின் சைக்கிள் ஓட்டுநர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு இணைய வழி தேர்வுக்கான இணைப்பு கிடைக்கப்பெற்ற 90 நாட் களுக்குள் அவர்கள் தேர்வை எழுதிவிட வேண்டும்.
மின் ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் 30 நிமிடங்களில் 30 வினாக் களுக்குப் பதிலளிக்க வேண்டும். மின் சைக்கிள் ஓட்டுநர் கள் 40 நிமிடங்களுக்குள் 40 வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டும். அதில் அவர்கள் 80% மதிப்பெண்கள் பெற வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவாவதி தேதி குறிப்பிடப்படாத மின்னிலக்கச் சான்றிதழ் அளிக்கப் படும் என்று ஆணையம் தெரிவித்தது.
இல்லத்தனிமை உத்தரவின்போது சந்தித்தவர்கள் மீது குற்றச்சாட்டு
இந்தியாவிலிருந்து திரும்பி வந்ததும் நொவினா ஓயாசிஸ் ஹோட்டலில் 14 நாள் இல்லத்தனிமை உத்தரவின்போது சந்தித்துக் கொண்ட இந்திய குடிமக்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுமான 37 வயது சுரேஷ் நாயுடு போஜன்கி, 47 வயது பாரதி துல்சிராம் சவுத்ரி இருவர் மீது நேற்று இல்லத் தனிமை உத்தரவை மீறியதற்காக குற்றம் சாட்டப்பட்டது.
இந்தியாவிலிருந்து ஒரே விமானத்தில் இருவரும் மார்ச் 14ஆம் தேதி சிங்கப்பூர் வந்தனர். மார்ச் 20ஆம் தேதியன்று பின்னிரவு 12.30 மணிக்கும் 1.21 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சுரேஷ் தமது ஹோட்டல் அறையை விட்டு வெளியேறி முகக்கவசம் அணியாமல், அதே மாடியில் இருந்த பாரதியின் அறைக்குச் சென்றார். பாரதியும் சுரேஷை தனது அறைக்குள் அனுமதித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் $5,000 பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.

