இனவாத கருத்துகளை உரக்கக் கூறி இளையரை தாக்கியவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
2578a973-646f-4899-835d-aebd13fa821d
திருவாட்டி இலீன் லீயின் கணவருடன் பேசியபோது எடுக்கப்பட்ட படம். படம்: திருவாட்டி இலீன் லீ -

ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வில் சிலரை நோக்கி இன­வா­தக் கருத்­து­களை உரக்­கக் கூறி, ஓர் இளை­ய­ரைத் தாக்­கிய 33 வயது ஆட­வர் மீது நேற்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

அச்­சம்­ப­வத்­தின் தொடர்­­பில் முகமது ஆரிஸ் அன்­வர் அலி மீது பொது இடத்­தில் தொல்லை தந்த குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

குற்­ற­வாளி என்று நிரூ­பிக்­கப்­பட்­டால், அவ­ருக்கு ஆயி­ரம் வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

திரு கியென் டியோ யோங் காய், 21, எனும் பல்­க­லைக்­க­ழக மாண­வரை ஆரிஸ் குத்­தி­ய­தா­க­வும் உதைத்­தா­க­வும் கூறப்­பட்­டது.

மேலும், திரு செபாஸ்­டி­யன் வோங் சீ சியான் என்­ப­வ­ருக்கு எதி­ராக தகாதச் சொற்­க­ளைப் பயன்­ப­டுத்தி அவ­ரி­டம் இன­வா­தக் கருத்­து­களை உரக்­கக் கூறி­ய­தா­க­வும் கூறப்­பட்­டது.

சம்­ப­வம் கடந்த வியா­ழக்­கி­ழமை பின்­னி­ரவு 1.50 மணி அள­வில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா எஃப் 2 கார் நிறுத்­து­மி­டத்­தில் நடந்­தது.

திரு டியோ­வும் அவ­ரது நண்­பர்­களும் சைக்­கிள் ஓட்டி இர­வைக் கழிக்க திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். ஆனால், ஒரு சைக்­கிள் சக்­க­ரத்­தில் காற்­றில்லை என்று தெரிந்­த­வு­டன் வீடு திரும்ப முடிவு செய்த அவர்­கள் தங்­க­ளு­டைய சைக்­கிள்­களை வேனுக்­குள் ஏற்­றிக் கொண்­டி­ருந்­த­போது சம்­ப­வம் நிகழ்ந்­தது.

தாக்­கிய ஆட­வரை மன­ந­லப் பரி­சோ­த­னைக்­காக தடுப்­புக் காவ­லில் வைப்­ப­தற்கு நீதி­மன்­றத்­தி­டம் கோரிக்கை வைக்­கப்­போ­வ­தாக போலி­சார் நேற்று காலை­யில் விடுத்த அறிக்­கை­யில் கூறினர். அந்த சம்­ப­வம் பற்றி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் முன்­ன­தாக தெரி­வித்­தார் இல்­லத்­த­ரசி திரு­வாட்டி இலீன் லீ,

ஆட­வரை யாரும் சீண்­ட­வில்லை என்­றும் அவர் தமது மக­னை­யும் இரண்டு நண்­பர்­க­ளை­யும் நோக்கி இன­வா­தக் கருத்­து­க­ளை உரக்கக் கூறினார் என்றும் திரு­வாட்டி லீ குறிப்பிட்டிருந்தார்.