கலை மூலம் கவலை நீக்கிய பயிலரங்கு

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

கிருமிப் பரவல் நம்மைச் சூழ்ந்துள்ள கால­கட்­டத்­தில் பலரும் பலவித­மான மன அழுத்­தங்­க­ளுக்கு ஆளாகியுள்ளனர். இந்த மன அழுத்­தத்­தை வெவ்வேறு நபர்களும் வெவ்­வேறு வழி­களில் எதிர்ெகாள்கின்றனர். சிலருக்குக் கலை கைகொடுத்துள்ளது.

அதற்கு வழிவகுக்க, 'ஒரே ஆள்' என்ற தமிழ் தனி­யுரை (monologue) எழுத்துப் பயி­லரங்கை சிங்­கப்­பூர் இந்­திய தியேட்­டர் & ஃபிலிம் எக்ஸ்ப்­ளோ­ரர்­கள் (சிட்ஃபி) கடந்த மே 9ஆம் தேதி முதல் ஜூன் 27 வரை நடத்­தி­யது. தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஆத­ர­வ­ளித்த இந்தப் பயி­ல­ரங்­கிற்கு இயக்­கு­நரும் ஊடக கல்­வி­யா­ள­ரு­மான திரு சலீம் ஹாதி, 39, அமைப்­பா­ள­ராக இருந்­தார்.

பயி­ல­ரங்­கின் கருப்­பொ­ருள் 'போராட்­டம்'. போராட்­டம் என்­றால் உடல் ரீதி­யான சண்டை அல்ல. மக்­கள் ஒவ்­வொரு நாளும் வெவ்­வேறு வகை­ மனப் போராட்­டங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர். இவற்றை எழுத்து என்ற கரு­வி­யின் மூலம் கரைக்க முற்­பட்டது பயிலரங்கு.

பயி­ல­ரங்­கில் கலந்­துகொண்ட 12 பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு ஐந்து நிமிடம் நீடிக்கும் தனி­யு­ரையை எழுத கற்­றுத்தரப்பட்டது.

இணை­யம் வழி நடைபெற்ற ஏழு கலந்து ரையாடல்களுக்குப் பின்னர் ஜூன் 27 அன்று நடந்த இறுதி நிகழ்­வில் பங்­கேற்­பா­ளர்­கள் நேர­டி­யாகச் சந்­தித்து தங்­க­ளின் தனி­யு­ரை­க­ளைப் படைத்­த­னர்.

ஈழத் தமிழர்களின் மனப் போராட்­டங்

­க­ளைப் பற்றி தன் தனி­யு­ரை­யில் எழு­திய அர­சாங்க ஊழி­ய­ரான திரு ரெங்­க­நா­தன் கோபா­ல­கி­ருஷ்­ணன், 39, "சமூ­கப் பிரச்­சி­னை­க­ளின் தாக்­கம் மிக அதி­க­ம். அவற்­றைப் பற்றி நாம் சிந்­திக்க வேண்­டும். அதனால்தான் என் தனிப்­பட்ட பிரச்­சி­னை­களைவிட சமூகப் பிரச்­சி­னைக­ளைப் பற்றி எழு­த முடிவு செய்தேன்," என்றார்.

"அதிர்ச்சிக்குப் பிந்தைய மன­உ­ளைச்­சல் பாதிப்பின் (PTSD) தாக்கம் நெடுநாள் இருக்கும். போர்க்காயங்­கள்கூட மறைந்­து ­வி­டும், ஆனால் மன­க் காயத்தை மறப்­பது மிகக் கடி­னம். அதனால் மன­தளவில் பாதிக்­கப்­பட்ட நபரை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு என் கதையை எழு­தி­னேன்," என தமது அனு­ப­வத்­தைப் பகிர்ந்­தார்.

சுவா சூ காங் உயர்­நிலைப் பள்­ளி­யில் உயர்­நிலை இரண்டில் படிக்­கும் செ. அ. தாராஸ்ரீ, 13, "நிதர்­ச­னம்" என்ற கற்­பனைக் கதையை எழு­தி­னார். மன­திற்­கும் புத்­திக்­கும் இடையே நடக்­கும் போராட்­டத்தை அவர் அதில் எடுத்­து­ரைத்­தார்.

"ஒரு நல்ல படைப்­பின் பின்­னணி என்­ன­வென்­றும், ஒரு நல்ல கதையை எழுத எதிர்­நோக்­க­வேண்­டிய சவால்­கள் பற்­றி­யும் நான் கற்­றுக்­கொண்­டேன்" என்று கூறி­னார் தாராஸ்ரீ.

வரும் செப்­டம்­பர் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை 'சோலோ/ஒரே ஆள்' என்ற தனி­யுரை நிகழ்ச்­சியை இரு மொழிகளில் நடத்தத் திட்டமிடுகிறது சிட்ஃபி அமைப்பு. இருமொழிகளில் புலமை பெற்ற கலைஞர்கள் நடத்தும் அதிகமான நேரடிப் பயிற்சிகளை அது கொண்டிருக்கும்.

கடந்த பயி­ல­ரங்­கில் கலந்­துகொண்ட பங்­கேற்­பா­ளர்­கள் தங்கள் திறன்களைச் செம்மைப்படுத்த இது வாய்ப்பாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார் ஏற்பாட்டாளர் திரு சலீம் ஹாதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!