ஏடிஸ் கொசுக்கள் குறைக்கப்பட்டன

ஏடிஸ் கொசுக்கள் குறைக்கப்பட்டன

1 mins read
80a64075-8d5c-40e8-8097-8785f2d38deb
-

டெங்கி காய்ச்­ச­லைத் தடுக்க சிங்­கப்­பூர் கையாண்­டி­ருக்­கும் வோல்­பாக்­கியா முறை ஏடிஸ் கொசுக்­க­ளின் எண்­ணிக்­கையை சுமார் 98 விழுக்­காடு குறைத்­துள்­ள­தா­கத் தேசி­ய சுற்­றுப்­புற வாரியம் தெரி­வித்­துள்­ளது. சில இடங்­களில் டெங்­கிக்கு ஆளா­னோ­ரின் எண்­ணிக்கை 88 விழுக்­காடு குறை­ந்தது. ஈசூன், தெம்ப­னீஸ், புக்­கிட் பாத்­தோக் ஆகிய பகு­தி­கள் அவற்­றில் அடங்­கும்.

வோல்­பாக்­கியா முறை ஏடிஸ் கொசுக்­கள் இனப் பெருக்­கம் செய்­வ­தைக் கட்­டுப்­ப­டுத்த உத­வு­கிறது.

இந்த வரு­டத்­தின் கடைசி காலாண்­டில் மரின் பரேட் போன்ற பகு­தி­க­ளி­லும் வோல்­பாக்­கிய முறை செயல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.