மின்சிகரெட் உள்ளிட்ட பொருட்களை சிங்கப்பூருக்குள் கடத்திய குற்றத்திற்காக 14 ஆடவருக்குச் சிறை

சுமார் $700,000 மதிப்­புள்ள மின்­சி­க­ரெட்­டு­க­ளை­யும் அவை தொடர்­பான சாத­னங்­க­ளை­யும் சிங்­கப்­பூ­ருக்­குள் கடத்தி வந்த குற்­றத்­திற்­காக 14 ஆட­வர்­க­ளுக்கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. சுகா­தார அறி­வி­யல் ஆணை­ய­மும் குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­ய­மும் இணைந்து நேற்று இதனை தங்­க­ளது கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.

கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் 22 வய­துக்­கும் 54 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். பிடி­பட்ட ஆட­வர்­கள் அனை­வ­ரும் மலே­சிய நிறு­வ­னத்­தைச் சேர்ந்த லாரி ஓட்­டு­நர்­கள் மற்­றும் உத­வி­யா­ளர்­கள்.

மலே­சி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­குள் கோழி­களை ஏற்றி வரு­வ­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட லாரி­களை ஜூன் 7ஆம் தேதி குடி­நு­ழைவுச் சோத­னைச் சாவடி ஆணைய அதி­கா­ரி­கள் இடை­ம­றித்து சோதனை நடத்­தி­னர். அப்­போது மலே­சி­யா­வில் பதிவு செய்­யப்­பட்ட ஏழு லாரி­கள் பிடி­பட்­டன.

தடை செய்­யப்­பட்ட பொருட்­கள் அந்த லாரி­களில் மறைத்து கடத்தி வரப்­பட்­டதை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர்.

லாரி ஓட்­டு­நர்­களும் லாரி­களில் இருந்த உத­வி­யா­ளர்­களும் சிங்­கப்­பூ­ரில் ஒரு குறிப்­பிட்ட இடத்­திற்கு அந்­தப் பொருள்­க­ளைக் கொண்டு செல்­லு­மாறு உத்­த­ர­விட்­டப்­பட்­டது சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் நடத்­திய விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது.

அங்­கி­ருக்­கும் நபர் ஒரு­வர் தடை செய்­யப்­பட்ட இந்­தப் பொருள்­க­ளைப் பெற்­றுக்­கொள்ள திட்­டம் வகுக்­கப்­பட்டு இருந்­தது.

54,392 மின்­சி­க­ரெட்­டு­களும் அவை தொடர்­பான சாத­னங்­களும் லாரி­களில் கடத்தி வரப்­பட்­டது தொடர்­பாக 14 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­கள் அனை­வ­ரும் மலே­சி­யர்­கள்.

கடந்த வாரம் திங்­கட்­கி­ழமை (ஜூன் 28) அவர்­க­ளுக்கு வெவ்­வேறு கால­கட்ட சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அதி­க­பட்­ச­மாக இரு மாத சிறைத் தண்­டனை விதி­கப்­பட்­டது.

கைப்­பற்­றப்­பட்ட பொருள்­க­ளின் மதிப்பு சுமார் $700,000. சிங்­கப்­பூ­ரில் இந்த அள­வுக்கு மின்­சி­க­ரெட்­டு­கள் கைப்­பற்­றப்­பட்டு இருப்­பது இதுவே முதல்­முறை.

மின்­சி­க­ரெட்­டு­க­ளை­யும் அவை தொடர்­பான சாத­னங்­க­ளை­யும் இறக்­கு­மதி செய்­வது, விநி­யோ­கம் செய்­வது, விற்­பது, விற்­ப­னைக்­காக வைத்­தி­ருப்­பது போன்­றவை குற்­றங்­க­ளா­கும்.

முதல்­முறை இக்­குற்­றங்­களில் ஈடு­பட்டு நீதி­மன்­றத்­தில் குற்­ற­வாளி என உறுதி செய்­யப்­ப­டு­வோ­ருக்கு $10,000 வரை­யி­லான அப­ரா­தம், ஆறு மாதம் வரை­யி­லான சிறை போன்­றவை தண்­ட­னை­க­ளாக விதிக்­கப்­ப­ட­லாம். மறு­முறை இதே குற்­றங்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்­கான தண்­டனை இரட்­டிப்­பா­கும்.

அதே­போல தடை செய்­யப்­பட்ட புகை­யி­லைப் பொருள்­களை வாங்­கு­வ­தும் பயன்­ப­டுத்­து­வ­தும் குற்­றங்­க­ளா­கும். அந்­தக் குற்­றங்­க­ளுக்கு $2,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!