எம்பிளாய்மென்ட் பாஸ்: இந்தியர் விகிதம் இரட்டிப்பு

எம்பிளாய்மென்ட் பாஸ்: இந்தியர் விகிதம் இரட்டிப்பு

1 mins read
e050c6ba-f6a4-4cb9-8722-b3f64219b877
-

கடந்த 2005ஆம் ஆண்டு 14 விழுக்­கா­டாக இருந்த எம்பிளாய்மென்ட் பாஸ் பெற்ற இந்­தி­யர்­க­ளின் விகி­தம், கடந்த ஆண்டு 25% என்று கிட்டத்தட்ட இரட்­டிப்­பா­னது.

சிங்­கப்­பூ­ரின் மின்­னி­லக்­கப் பொரு­ளி­ய­லின் விரை­வான வளர்ச்­சியே இதற்­குக் கார­ணம் என்­றும் சிங்­கப்­பூர்-இந்­தியா இடை­யி­லான விரிவான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு உடன்­பாடு கார­ண­மாக 'எம்­பி­ளாய்­மென்ட் பாஸ்' கொண்ட இந்­தி­யர்­க­ளுக்கு அதி­கச் சாத­க­மாக நடந்­து­கொள்­வ­தால் அது நிக­ழ­வில்லை என்­றும் மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்து இருக்­கி­றார்.

இதே கால­கட்­டத்­தில், எம்­பி­ளாய்­மென்ட் பாஸ் பெற்று இருக்­கும் சீன நாட்­ட­வ­ரின் விகி­தம் கிட்­டத்­தட்ட நிலை­யாக இருந்து வரு­கிறது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, சென்ற ஆண்டு வெளி­நா­டு­களில் உள்ள பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளின் அலு­வ­ல­கங்­களில் இருந்து, அவற்­றின் சிங்­கப்­பூர் கிளை­க­ளுக்கு அல்­லது துணை நிறு­வ­னங்­க­ளுக்கு 4,200 பேர் பணி­யிட மாற்­றம் செய்­யப்­பட்­ட­னர். அந்த வெளி­நாட்­ட­வர்­களில் கிட்­டத்­தட்ட 500 பேர் இந்­தி­யர்­கள் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.