நாட்டின் அடிப்படையில் பாகுபாடு காட்டியதாக ஆண்டுக்கு 170 புகார்

1 mins read
4966a783-7e26-4618-a074-2a1a1ce97820
-

நாட்டு அடிப்­ப­டை­யி­லான பாகு­பாடு தொடர்­பில் கடந்த மூன்­றாண்­டு­களில் சரா­ச­ரி­யாக ஆண்­டுக்கு 170 புகார்­களை நியா­ய­மான வேலை நடை­மு­றை­க­ளுக்­கான முத்­த­ரப்­புக் கூட்­டணி கையாண்­டது என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரி­வித்­தார்.

அவற்­றில் கிட்­டத்­தட்ட பாதிப் புகார்­கள், மொத்த, சில்­லறை வணி­கம், நிர்­வாக, ஆத­ரவு சேவை­கள், பிற சேவைத் துறை­களில் இருந்து வந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அப்­பு­கார்­களை விசா­ரித்த முத்­தரப்­புக் கூட்­டணி, நியா­ய­மா­ன­வை­யா­கக் கரு­திய புகார்­களை அம­லாக்க நட­வ­டிக்­கைக்­காக மனி­த­வள அமைச்சிடம் அனுப்­பி­யது.

"பாகு­பா­டான ஆளெ­டுப்பு நடை­மு­றை­கள் சகித்­துக்­கொள்­ளப்­பட மாட்டா. அனைத்து நிறு­வ­னங்­களும் நியா­யப் பரி­சீ­ல­னைச் சட்­ட­மைப்­பின் விதி­மு­றை­க­ளுக்கு இணங்கி நடக்க வேண்­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. வேலைக்­குத் தொடர்­பில்­லாவற்றின் அடிப்­ப­டை­யில் பாகு­பாடு காட்­டக்­கூ­டாது," என்று அமைச்­சர் டான் வலி­யு­றுத்­தி இருக்கிறார்.

ஆளெ­டுப்­பில் பாகு­பாடு காட்­டும் நிறு­வ­னங்­கள் மீதான நட­வடிக்­கை­களை அர­சாங்­கம் கடந்த ஆண்டு ஜன­வ­ரி­யில் கடு­மை­யாக்­கி­யது. அதன்­படி, தவ­றி­ழைக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கான வேலை அனு­ம­திச்­சீட்டுச் சிறப்­புச் சலு­கை­கள் நிறுத்தி வைக்­கப்­படும் காலம், குறைந்தது 12 மாதங்களில் இருந்து 24 மாதங்­கள்­வரை என உயர்த்­தப்­பட்­டது.

அத்­து­டன், வேலைக்கு விண்­ணப்­பிக்க உள்­ளூர்­வா­சி­க­ளுக்கு அதிக கால அவ­கா­சம் அளிக்­கும் வித­மாக, வேலை அனு­ம­திச்­சீட்டு கோரி விண்­ணப்­பிக்­கு­முன் 'மைகரி­யர்ஸ்­ஃபி­யூச்­சர்' தளத்­தில் வேலை குறித்த விளம்­ப­ரம் இடம்­பெற்று இ­ருக்க வேண்­டிய குறைந்­த­பட்ச காலம் 14 நாள்­களில் இருந்­தது 28 நாள்­க­ளாக உயர்த்­தப்­பட்­டது.