பெட்ரா பிராங்கா தீவில் இவ்வாண்டு இறுதிக்குள் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பல் நிறுத்துமிடம், கூடுதல் தளவாடங்கள், நிர்வாக ஆதரவு, தொடர்பு வசதிகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
அத்துடன், ஏழு ஹெக்டர் பரப்பளவில் நிலமீட்பும் இடம்பெறும் என்று அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது.
அப்பகுதியில் கடல்துறைப் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் தேடி, மீட்கும் பணிகளின் செயல்திறனை மேம்படுத்தவும் ஏதுவாக அந்த மேம்பாட்டுப் பணிகள் இடம்பெறவுள்ளன. உள்நாட்டு, அனைத்துலகச் சட்டங்களுக்கு இணங்கி, அப்பணிகள் மேற் கொள்ளப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
பணிகள் நிறைவடைய பல ஆண்டுகள் ஆகலாம் என எதிபார்க்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
இவ்வாண்டு இறுதிக்குள் பெட்ரா பிராங்கா தீவில் தொடங்க இருக்கும் மேம்பாட்டுப் பணிகள்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

