மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் பிற்பகல் இரண்டு சிங்கப்பூரர்களைக் கைது செய்தனர். அதையடுத்து, ஏறத்தாழ ஒரு கிலோ போதைமிகு அபின், பல்வகை போதைப்பொருள், $50,000 ரொக்கம் ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 83 அருகில் 65 வயது ஆடவரும் 55 வயது பெண்மணியும் பிடிபட்டனர்.
அந்த ஆடவரிடம் 938 கிராம் போதைமிகு அபினும் $7,000 ரொக்கமும் இருந்தன.
அதனைத் தொடர்ந்து தெம்
பனிஸ் வட்டாரத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனையிட்டபோது போதைப்பொருளும் ரொக்கமும் சிக்கின.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு $102,000க்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

