திருமணங்கள், மணமுறிவுகள் குறைந்தன

திருமணங்கள், மணமுறிவுகள் குறைந்தன

1 mins read
70a0fb17-9e13-41a1-aaf9-8e47fca9c17d
-

கொவிட்-19 கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள இடையூறுகளின் காரணமாக திருமணங்கள் மற்றும் மணமுறிவுகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் குறிப்பிடுகின்றன.

2020ஆம் ஆண்டில் பதிவான திருமணங்களின் எண்ணிக்கை 10.9 விழுக்காடு குறைந்து 22, 651ஆனதாக புள்ளிவிவரத்துறை தெரிவித்தது.

கிருமிப்பரவல் முறியடிப்புக் காலக்கட்டம் உள்ளிட்ட இடையூறுகள் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்தாண்டில் மட்டும் 6, 959 திருமணங்கள் முறிந்தன. அதற்கு முந்தைய ஆண்டில் 7, 623 திருமணங்கள் விவாகரத்தில் முறிந்தன.