அங் மோ கியோ வீட்டில் தீ - மருத்துவமனையில் இருவர்

1 mins read
154b234b-22b0-436a-a776-554f4d4bab86
-

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் தனிநபர் நடமாட்ட சாதனம் தீ பிடித்ததை அடுத்து அந்த வீட்டில் இருந்த இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் அங் மோ கியோவில் புளோக் 314ன் பத்தாவது மாடியிலுள்ள ஒரு வீட்டில் பின்னிரவு 12.25 மணிக்கு நடந்தது.

வீட்டில் அப்போது இருந்த இரண்டு பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மற்றொருவர் கே கே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அந்த புளோக்கிலிருந்து கிட்டத்தட்ட 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.