கொவிட்-19 சூழல்: திருமணங்கள், மணமுறிவுகள் குறைந்தன

கடந்த ஆண்­டில் கிரு­மித் தொற்று முறி­ய­டிப்பு மற்­றும் தொற்­றுக்கு எதி­ரான கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­க­ளின் கார­ண­மாக திரு­ம­ணங்­க­ளின் எண்­ணிக்கை கணி­ச­மா­கக் குறைந்­தன. அத்­து­டன் மண­வி­லக்கு செய்­து­கொள்­ள­வி­ருந்த தம்­ப­தி­ய­ரின் திட்­டங்­களும் நின்று போயின.

கடந்த 2006ஆம் ஆண்­டுக்­குப் பிறகு இப்­போ­து­தான் திரு­ம­ணம் செய்­து­கொள்­வோ­ரின் எண்­ணிக்கை ஆக மோச­மான சரி­வைக் கண்­டுள்­ளது.

இந்த விவ­ரங்­களை சிங்­கப்­பூர் புள்ளி விவ­ரத்­துறை நேற்று வெளி­யிட்­டது.

கடந்த ஆண்­டில் 22,651 திரு­ம­ணங்­கள் பதிவு செய்­யப்­பட்­டன. இது 2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 10.9 விழுக்­காடு குறைந்­துள்­ளது. 2019ஆம் ஆண்­டில் 25,434 திரு­ம­ணங்­கள் பதி­வு ­செய்­யப்­பட்­டன. 2006ஆம் ஆண்­டுக்­குப் பின் இதுவே ஆக மோச­மான சரிவு என்று தெரி­ய­வந்­துள்­ளது.

திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­வர்­களில் 78.5 விழுக்­காட்­டி­னர் முதன்­மு­த­லாக திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­வர்­கள். கடந்த ஆண்டு 6,959 மண­வி­லக்­கு­கள் நடந்­துள்­ளன. இந்த விகிதம் அதற்கு முந்­தையை ஆண்­டை­விட 8.7 விழுக்­காடு குறைவு.

ஆயி­ரம் தம்­ப­தி­ய­ரில் மண­மு­றிவு கேட்டு விண்­ணப்­பித்­த­வர்­களில் 6.3 விழு­க்­காட்டினர் ஆண்­களும் 6.1 விழுக்­காடு பெண்­களும் ஆவர். இந்த எண்­ணிக்கை 2010ஆம் ஆண்­டில் ஆண்­களுக்கு 7.5 விழுக்­கா­டா­க­வும் பெண்­களுக்கு 7.2 விழுக்­கா­டா­க­வும் இருந்­தது.

கொவிட்-19 தொற்று திரு­ம­ணங்­க­ளின் எண்­ணிக்கை குறைந்து இருந்­தா­லும் மண­மு­றிவு செய்­து­கொள்­ப­வர்­க­ளின் மனப்­போக்­கை­யும் மாற்­றி­யுள்­ளது என்றே சொல்ல வேண்­டும்.

கொவிட்-19 கார­ண­மாக விதிக்­கப்­பட்ட பாது­காப்பு இடை­வெ­ளிக்­கட்­டுப்­பாடு மற்­றும் தொற்­றுக்கு எதி­ரான கட்­டுப்­பா­டு­களை அடுத்து கடந்த ஆண்டு திரு­ம­ணம் செய்­து­கொள்­ளத் திட்­ட­மிட்­டி­ருந்­தோர் தங்­கள் திரு­மண வர­வேற்பு மற்­றும் பதி­வுத் திரு­மண நிகழ்­வு­க­ளை­யும் ஒத்­தி­வைக்­கும் நிலை ஏற்­பட்­டது.

அதே­போல் 2020ல் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த சட்­ட­பூர்வ பதி­வுத்­தி­ரு­ம­ணங்­களும் ஒத்­தி­வைக்­கப்­பட்­டன.

அதன்­பின் மெய்­நி­கர் நேரலை வழி­யாக பதி­வுத்­ தி­ரு­ம­ணம் செய்­து­கொள்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டது.

அப்­போது ஏரா­ள­மான தம்­ப­தி­யர் தங்­கள் பதி­வுத்­ தி­ரு­ம­ணம் செய்­து­கொண்­ட­னர். அதன்­படி தம்­ப­தி­யர் திரு­மண உறு­தி­மொ­ழியை எடுத்­துக்­கொள்ள, சாட்­சி­கள், தம்­ப­தி­யி­னர், திரு­ம­ணப் பதி­வா­ளர் அவ­ர­வர் வீட்­டி­லி­ருந்­த­வாறு திரு­ம­ணச் சான்­றி­த­ழில் கையெ­ழுத்­திட்டு அதனை அவ­ர­வர் கைத்­தொ­லை­பேசி புகைப்­ப­டக்­க­ருவி வழி காண்­பித்­த­னர்.

கலப்­பி­னத் திரு­ம­ணங்­கள் 2019ல் 19.7 விழுக்­கா­டாக இருந்து. அது கடந்த ஆண்­டில் 18.2 விழுக்­கா­டா­கக் குறைந்­துள்­ளது என்று அந்த புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!