பல பெண்களை மானபங்கப்படுத்தியதாக முன்னாள் தொழில்நுட்பக் கல்விக் கழக விரிவுரையாளர் மீது நீதிமற்னம் ஒன்றில் வழக்கு பதிவாகியுள்ளது.
பெண்களை மானபங்கப்படுத்தியதாக ஐந்து குற்றச்சாட்டுகளையும் அவ்வாறு செய்ய முயன்றதாக ஒரு குற்றச்சாட்டையும் 47 வயது டேரன் குவெக் சீ-வென் எதிர்நோக்குகிறார்.
சிங்கப்பூரரான அவர் சீமெயில் உள்ள ஐடிஈ காலேஜ் ஈஸ்ட் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் 2019ஆம் ஆண்டில் அந்தக் குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
குற்றச் செயல்களுக்கு ஆளானதாகச் சந்தேகிகப்படுவோரின் விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதியன்று குவெக் குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.
குவெக் மீதான வழக்கு இம்மாதம் 19ஆம் தேதியன்று விசாரணைக்கு வரும். அவர் மீது பதிவாகியுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

