வேலையிடப் பாகுபாடு, தொல்லைக்கு எதிராக வலுவான சட்டங்களுக்கு வேண்டுகோள்

வேலையிடப் பாகுபாடு, தொல்லைக்கு எதிராக வலுவான சட்டங்களுக்கு வேண்டுகோள்

3 mins read
62c9addd-20ae-40a6-84c9-474cb7dcd1e7
-

வேலை­யி­டத்­தில் பாகு­பாடு, தொல்லை ஆகி­யவை தொடர்­பான சட்­டங்­கள் வலுப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­றும் பணி­யி­டத்­தில் பெண்­கள் எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­களைச் சமா­ளிக்க கண்­கா­ணிப்பு அமைப்­பு­க­ளுக்கு கூடு­தல் அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்றும் 'அவேர்' எனும் மாதர் செய­லாய்­வுச் சங்­கம் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

அத்­து­டன், உயர்­கல்வி நிலை­யங்­களில் தேசிய நன்­ன­டத்தை விதி­மு­றை­கள் நடப்­புக்கு வர­வேண்­டும் என்­றும் பாலி­யல் தொல்­லைக்கு ஆளா­ன­வர்­கள் உத­வி­யும் தக­வல்­களும் பெற தெளி­வான நடை­முறை­யும் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்றும் அவேர் அமைப்பு தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர் அர­சாங்­கக் கொள்­கை­களில் தாங்­கள் பார்க்க விரும்­பும் மாற்­றங்­கள் பற்றி இங்கு வசிக்­கும் 191 பேரு­டன் சமூக அள­வி­லான கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­திய பின்­னர், கொள்­கைப் பரிந்­து­ரை­கள் அடங்­கிய பட்­டி­யலை அமைப்பு நேற்று வெளி­யிட்­டது.

இவ்­வாண்டு மார்ச் முதல் மே மாதம் வரை கலந்­து­ரை­யா­டல்­கள் இடம்­பெற்­றன. ஒற்­றைப் பெற்­றோர், வெளி­நாட்டு வாழ்க்­கைத் துணைவர்­கள், ஆசி­ரி­யர்­கள், மாண­வர்­கள், பெற்­றோர், வேலை­யி­டத்­தில் பாகு­பாட்­டுக்கு ஆளா­ன­வர்­கள் என பல்­வேறு தரப்­பி­னர் கலந்­து­ரை­யாடல்­களில் பங்­கு­பெற்­ற­னர்.

பாலின சம­நி­லையை மேம்­ப­டுத்­து­வது குறித்து அர­சாங்­கம் இவ்­வாண்டு வெள்ளை அறிக்­கையை வெளி­யி­டும். அதனை ஒட்டி சம­நி­லையை மறு­ஆக்­கம் செய்­தல் என்ற தலைப்­பி­லான அந்­தக் கலந்து­ரை­யா­டல்­களை அவேர் நடத்­தி­யது.

இது தொடர்­பாக, பல்­வேறு பரிந்­து­ரை­கள் அடங்­கிய பெரிய அறிக்­கையை இம்­மா­தம் அர­சாங்­கத்தி­டம் சமர்ப்­பிக்­கப்­போ­வ­தாக அவேர் அமைப்பு தெரி­வித்­தது.

வேலை­யி­டத் தொல்­லை­ தொடர்பில் தேசிய அள­வில் சட்­டங்­கள் இயற்­றப்­பட்ட வேண்­டும் என்­பது அமைப்பு முன்­வைத்த பரிந்­து­ரை­களில் ஒன்று.

வேலை­யி­டத்­தில் அச்­சு­றுத்­தல் நிக­ழும் பட்­சத்­தில்' டாஃபெப்' எனப்­படும் நடு­நி­லை­யான வேலை­வாய்ப்பு நடை­மு­றை­கள் மீதான முத்தரப்பு வழி­காட்­டு­தல்­கள், சர்ச்சை கையாள்­த­லுக்­கான முத்­த­ரப்­புக் கூட்­டணி (TADM) ஆகி­யவை எடுக்க முடி­யும் நட­வ­டிக்­கை­கள் பற்றி தெளி­வு­ப­டுத்த, அவற்­றின் இணை­யத்­த­ளங்­களில் தேவை­யான தக­வல்­கள் இருக்­க­வேண்­டும் என்­றும் அவேர் பரிந்­து­ரைத்­தது.

வேலை­யி­டப் பாது­காப்­புக்கு எதி­ராக முழு­மை­யான சட்­டப் பாது­காப்பு இல்லை என்­றும் பாகு­பாடு குறித்து முறை­யி­டும் வழி­கள் பற்றி போதிய விழிப்­பு­ணர்வு இல்லை என்­றும் கலந்­து­ரை­யா­டல்­களில் பங்­கு­பெற்­ற­வர்­கள் கருத்­து­ரைத்­த­னர்.

அத­னால் மகப்­பேறு விடுப்பு முடிந்து வேலைக்குத் திரும்­பும் தாய்­மாருக்­குப் பாரபட்சமான போக்குக்கு எதி­ராக பாது­காப்பு அளிக்­கும் சட்­டங்­கள் இயற்­றப்­பட வேண்­டும் என்­றும் முத­லா­ளி­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் கட்­டா­யப் பயிற்­சி­யும் அளிக்­கப்­பட வேண்­டும் என்­றும் அவர்­கள் பரிந்­துரை செய்­த­னர்.

உயர்­கல்வி நிலைய வளா­கங்­களில் ஏற்­படும் பாலி­யல் தொல்­லை­யைக் கையாள ஒரே மாதி­ரி­யான செயல்­மு­றை­கள், நன்­ன­டத்தை விதி­மு­றை­கள் ஆகி­ய­வற்­று­டன் மாண­வர்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் இது­பற்றி நன்கு பயிற்சி அளிக்­கப்­பட வேண்­டும் என்று மாண­வர்­கள் பரிந்­துரை செய்­த­னர்.

அத்­து­டன், வீடு வாங்­கு­வ­தற்கு திரு­ம­ண­மான பெற்­றோ­ருக்கு இருக்­கும் அதே நடை­மு­றை­களும் மானி­யங்­களும் ஒற்­றைப் பெற்­றோ­ருக்­கும் வழங்­கப்­பட வேண்­டும் என்­றும் விவா­க­ரத்­து­களில் ஜீவ­னாம்­சத் தொகை ஒழுங்­காக வழங்­கப்­ப­டு­வதை நிர்­வ­கிக்க குழந்தை ஆத­ரவு அமைப்பு ஒன்று நிறு­வப்­பட வேண்­டும் என்­றும் அமைப்பு பரிந்­துரை செய்­தது. அத்­து­டன், அர­சாங்க நிதி உதவி பெறு­வ­தற்­கான தகு­தி­யைத் தளர்த்த வேண்­டும் என்­றும் சொத்­து­ரி­மைச் சட்­டத்­தில் திரு­ம­ணத்­துக்கு அப்­பாற்­பட்டு பிறந்­த­வர்­கள் எனும் பிரி­வி­னையை நீக்­க­வேண்­டும் என்­றும் அமைப்பு பரிந்து­ரைத்­துள்­ளது.