புதிய தகவல் திருட்டு மோசடிச் சம்பவங்கள்: வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் இழப்பு

வங்­கி­கள் அதன் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அதி­கா­ர­பூர்­வ­மாக அனுப்­பு­வது போலி­ருக்­கும் குறுந்­த­க­வல்­க­ளைக் கொண்டு நடத்­தப்­படும் புதிய வகை தக­வல் திருட்டு மோச­டிச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­று­வ­ரு­வ­தா­கக் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்த ஆண்­டின் ஜன­வரி, மே மாதங்­க­ளுக்கு இடைப்­பட்ட காலத்­தில் இத்­த­கைய தக­வல் திருட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­ற­தாக 374 புகார்­கள் கொடுக்­கப்­பட்­டன. அவற்­றில் பாதிக்­கப்­பட்­டோர் மொத்­த­மா­கச் சுமார் 1.07 மில்­லி­யன் வெள்­ளியை இழந்­த­னர்.

தனது வங்­கிக் கணக்­கி­லி­ருந்து கட்­ட­ணம் செலுத்­து­வ­தற்­கான முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கச் சம்­பந்­தப்­பட்­ட­வ­ருக்­குக் குறுந்­த­க­வல் வரும். அவ்­வாறு செய்­ய­வில்லை என்­றால் அதே குறுந்­த­க­வ­லில் உள்ள ஓர் இணைய முக­வ­ரிக்­குச் செல்­லு­மாறு அவர் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வார்.

அந்த முக­வரி, வங்­கி­யின் அதி­கா­ர­பூர்வ இணை­யத்­த­ளத்­தைப் போலி­ருக்­கும் ஒரு பக்­கத்­திற்கு வாடிக்­கை­யா­ளரை அழைத்­துச் செல்­லும். அந்த இணை­யத்­த­ளம், தங்­க­ளின் தனிப்­பட்ட விவ­ரங்­கள், வங்­கிக் கணக்­குத் தக­வல்­கள், ஒரு முறை பயன்­ப­டுத்­தும் மறைச்­சொல் போன்­ற­வற்­றைப் பகிர்ந்­து­கொள்­ளு­மாறு வாடிக்­கை­யா­ள­ரைக் கேட்­டுக்­கொள்­ளும்.

வங்கி ஏற்­கெ­னவே அதி­கா­ர­பூர்­வ­மா­கக் குறுந்­த­க­வல்­களை அனுப்­பிய அதே கணக்­கி­லி­ருந்தே போலி­யா­ன­வை­யும் அனுப்­பப்­பட்­ட­தாக வாடிக்­கை­யா­ள­ரின் கை­பேசி காட்­டக்­கூ­டும் எனக் காவல்­து­றை­யி­னர் எச்­ச­ரிக்­கின்­ற­னர்.

தனிப்­பட்ட தக­வல்­க­ளைப் பகிர்ந்து­கொண்ட பிறகு தங்­க­ளின் வங்­கிக் கணக்­கி­லி­ருந்து பணம் எடுக்­கப்­பட்­ட­தாக வாடிக்­கை­யா­ள­ருக்­குக் குறுந்­த­க­வல்­கள் வரும். அப்­போ­து­தான் தாங்­கள் தக­வல் திருட்டு மோச­டிக்கு ஆளா­னது அவ­ருக்­குத் தெரி­ய­வ­ரும்.

கேட்­கா­மல் அனுப்­பப்­படும் குறுந்­த­க­வல்­களில் இடம்­பெ­றும் இணை­யத்­தள முக­வ­ரி­க­ளுக்­குச் செல்­லவோ தொலை­பேசி எண்­களை அழைக்­கவோ வேண்­டாம் எனக் காவல்­து­றை­யி­னர் பொது­மக்­களை எச்­ச­ரிக்­கின்­ற­னர். மேலும், அத்­த­கைய குறுந்­த­க­வல்­களில் இடம்­பெ­றும் தக­வல்­கள் சரி­யா­ன­வை­தானா என்­பதை அதி­கா­ர­பூர்வ இணை­யத்­த­ளங்­கள் போன்­ற­வற்­று­டன் சரி­பார்க்­க­வேண்­டும்.

தனிப்­பட்ட தக­வல்­கள், வங்­கிக் கணக்கு விவ­ரங்­கள், ஒரு முறை பயன்­படுத்தும் மறைச்­சொல் போன்­ற­வற்றை யாரு­ட­னும் பகிர்ந்­து­கொள்­ளக்­கூ­டாது எனப் பொது­மக்­கள் எச்­ச­ரிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

வங்கி அதி­கா­ரி­களோ அர­சாங்க அதி­கா­ரி­களோ அத்­த­கைய தக­வல்­க­ளைத் தொலை­பே­சி­வ­ழி கேட்­க­மாட்­டார்­கள் என்­பது வலி­யுறுத்­தப்­ப­டு­கிறது.

அதோடு, அனு­மதி­யின்றி கணக்­கி­லி­ருந்து வேறொ­ரு­வர் பணத்தை எடுத்­த­தா­கவோ கட்­ட­ணம் செலுத்­தி­ய­தா­கவோ தெரி­ய­வந்­தால் வங்­கி­யி­டம் தெரி­யப்­ப­டுத்­த­வேண்­டும், சம்­பந்­தப்­பட்ட வங்­கியின் கடன் அல்­லது பற்று அட்­டை­யைச் செய­லி­ழக்­கச் செய்­ய­வேண்­டும் எனக் காவல்­து­றை­யி­னர் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!