அப்ப ர் பாய லேபார் ரோட்டில் உள்ள ‘போட்ட னிக் அட் பார்ட்லி’ கொண்டோமினியத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இன்று அதிகாலை நேரத்தில் 69 வயது ஆடவர் ஒருவர்
மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்ப வம் குறித்து தங்களுக்கு இன்று காலை 7 மணிக்குத் தகவல் கிடைத்த து என்று போலிசார்
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
“69 வயது ஆடவர் ஒருவர் சுயநினை வின்றி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டா ர். பின்னர் அவர் மரணமடைந்தார்,” என்று கூறிய போலிஸ், ஆரம்ப கட்ட விசாரணைக்குப் பின் அவரது மரணத்தின் சூது எவும்
இல்லை என்று தெரிய வருகிறது என்றும் விவரித்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அனுப்பப்பட்ட காணொளியில், முதலுதவி ஊழியர்கள் இருவர் அந்த ஆடவரை நீச்சல் குளத்திலிருந்து மேல இழுந்ததை யும், அவர்களில் ஒருவர் ஆடவரின் நாடித் துடிப்பைச் சோதித்த பிறகு, இதய இயக்க
மீட்பு சிகிச்சையை த் தொடங்கியதையும் காண முடிந்தது. போலிஸ் விசாரணை தொடர்கிறது.