சமூகத் திட்டப் பணியில் இளம் தலைவர்கள்

சிண்டா இளையர் மன்ற ஏற்பாட்டில் இனவாதம், மாதர்க்கு அதிகாரம் வழங்குதல், மனநலம் குறித்து ஆய்வு

இர்­ஷாத் முஹம்­மது

சமூ­கத்­தில் நில­வும் பிரச்­சி­னை­கள், அக்­க­றை­கள், சவால்­க­ளைப் பற்றி தீர ஆராய்ந்து, கலந்­தா­லோ­சித்து அதற்­கான தீர்­வு­களை வரை­யும் சமூ­கத் திட்­டப் பணி­யில் 12 இளை­யர்­கள் ஈடு­பட்­ட­னர். சிண்டா எனும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­தின் பிரி­வாக இயங்­கும் சிண்டா இளை­யர் மன்­றத்­தின் ஏற்­பாட்­டில் 15 வார திட்­ட­மா­னது சிண்டா இளம் தலை­வர்­கள் திட்­டம்.

இன­வா­தம், மாதர்க்கு அதி­கா­ரம் வழங்­கு­தல், மன­ந­லம் ஆகிய மூன்று அம்­சங்­களை மூன்று இளை­யர் குழுக்­களும் அலசி ஆராய்ந்­த­ன.

திட்­டத்­தில் பங்­கு­பெற்று வெற்­றி­க­ர­மா­கத் தேர்ச்சி அடைந்த 12 இளை­யர்­களும் இம்­மா­தம் 3ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூர் கல்சா சங்க மண்­ட­பத்­தில் நடந்த பட்­ட­ம­ளிப்பு விழா­வில் கௌரவிக்­கப்­பட்­ட­னர்.

சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து­கொண்டு பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு சான்­றி­தழ் வழங்­கி­னார்.

நோய்ப் பர­வல் சூழ­லால் நீண்ட இடை­வெ­ளிக்­குப் பின்­னர் நடந்த இந்த நேரடி நிகழ்­வில் சிண்­டா­வின் தலைமை செயல்­பாட்டு அதி­காரி திரு தம்­பி­ராஜா, பங்­கு­பெற்ற இளை­யர்­கள், அவர்­க­ளின் பெற்­றோர்­, சிண்டா இளை­யர் மன்ற தொண்­டூ­ழி­யர்­கள் என மொத்­தம் 30 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

மேலும் பலர் நேர­லை­யா­க­வும் கலந்­து­கொண்­ட­னர். சிண்­டா­வின் தலை­வ­ரும் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்­டாம் அமைச்­ச­ரு­மான குமாரி இந்­தி­ராணி ராஜா தமது வாழ்த்­துச் செய்­தி­யைக் காணொ­ளிப் பதிவு மூலம் இளை­யர்­க­ளுக்கு வழங்­கி­னார்.

நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய திரு அன்­ப­ரசு, இளை­யர்­க­ளின் துடிப்­பான செயல்­பாடு வர­வேற்­கத்­தக்­கது என்­றும் இன்­னும் நிறைய இளை­யர்­கள் சமூக சேவை­யாற்ற முன்­வ­ர­வேண்­டும் என்றும் கூறி னார்.

"நீங்­கள்­தான் மாற்­றத்­தைக் கொண்­டு­வ­ரக்­கூ­டிய சக்தி படைத்­த­வர்­கள். அத­னால் உங்­க­ளுக்­குப் பொறுப்­பு­கள் உள்­ளன. இளை­யர் சக்தி நமக்கு மேலும் தேவை," என்­றார் அவர்.

எந்த சமூ­க­மும் நிறை­வான சமூ­க­மாக இருக்­க­மு­டி­யாது. இருப்­பி­னும் முடிந்­த­வரை சிறந்த சமூ­க­மாக இருக்­கவே அனை­வ­ரும் முயற்­சிக்­கி­றோம் என்ற கருத்­தைப் பகிர்ந்த திரு அன்­ப­ரசு, கடந்த சில ஆண்­டு­க­ளாக இன­வா­தம், மன­

ந­லம், குடும்ப வன்­முறை போன்ற பிரச்­சி­னை­கள் நம் சமூ­கத்­தில் தலை­தூக்­கு­வதை நினை­வூட்­டி­னார்.

"அந்­தப் பிரச்­சி­னை­கள் மேலும் மோச­மா­கா­மல் எப்­படி சமா­ளிப்­பது என்­ப­தைக் கண்­ட­றி­வது நமது பொறுப்பு," என்­றார் அவர். பெற்­றோரைக் கைவிட்­டு­வி­டா­தீர்­கள் என்று ஆணித்­த­ர­மாக இளை­யர்­

க­ளுக்கு அறி­வு­றுத்­தி­னார் திரு அன்­ப­ரசு.

"முதி­யோர் பலர் தனி­மை­யில் தவிக்­கின்­ற­னர். அந்த எண்­ணிக்கை அதி­க­ரித்­து­ வ­ரு­கிறது," என்று அவர் விளக்­கி­னார்.

"ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் சவால்­கள் உள்­ளன. எல்­லோ­ரும் வெவ்­வேறு நிலை­க­ளி­லி­ருந்து தொடங்­கு­

கி­றோம் என்­ப­தை­யும் நாம் அறி­ய­வேண்­டும். சோத­னை­களை சாத­னை­க­ளாக்­கு­வோம்," என்று இளை­யர்­க­ளுக்கு உற்­சா­கம் ஊட்­டி­னார்.

இளை­யர்­க­ளின் பகிர்வு

சிண்டா இளம் தலை­வர்­கள் திட்­டத்­தில் பங்­கு­பெற்ற சில இளை­யர்­கள், தங்­கள் அனு­ப­வத்­தைப் பற்றி வரு­கை­யா­ளர்­க­ளு­டன் பகிர்ந்து­கொண்­ட­னர்.

"மேடை­யில் உரை­யாற்­று­வது என்­றாலே முன்­பெல்­லாம் எனக்கு கால் நடுங்­கும். ஆனால் தற்­போது உங்­கள் முன் நான் உறு­தி­யு­டன் பேசு­கி­றேன். இந்­தத் திட்­டத்­தின் அணு­கூ­லங்­களில் இது­வும் ஒன்று," என்­றார் ஸ்ரீ துர்காஷினி.

நிகழ்ச்­சி­யில் மூன்று குழுக்­களும் தங்­க­ளின் ஆய்­வு­களை சுவ­ரொட்­டி­கள், காணொ­ளி­கள் என வெவ்­வேறு வித­மா­கப் படைத்­த­னர்.

மாதர்க்கு அதி­கா­ரம் வழங்­கு­தல் குறித்த படைப்­பு பற்றி விளக்­கிய குமாரி மதினா பீவி, தாம் கலப்­புத் தற்­காப்­புக் கலை­யைக் கற்­றுள்­ளது உள்­ளிட்ட சில சுவா­ர­சி­ய­மான அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­தார்.

இன­வா­தம் குறித்து விளக்­கிய குழுவினர், வெளிப்­ப­டை­யாக தங்­க­ளின் அனு­ப­வங்­களை அனை­வ­ரு­ட­னும் பகி­ரும் தன்மை வேண்­டும் என்­ற­னர். சுவ­ரொட்டி முழு­தும் இன­வா­தக் கருத்­து­களை அவர்­கள் எழுதி வைத்­தி­ருந்­த­னர்.

பதற்­றம் என்­றால் என்ன, அதைக் களை­யும் வழி­கள், உத­விக்கு எவரை அணு­க­லாம் போன்­ற­வற்றை மன­ந­லம் குறித்து ஆராய்ந்த குழு படைத்­த­து. மற்­ற­வர்­களை உற்­சா­கப்­ப­டுத்­தும் வகை­யில் தன்­மு­னைப்பு வாச­கங்­களை எழுதி அனை­வ­ருக்­கும் குழு வழங்­கி­யது.

தலை­மைத்­து­வம், குழு­வாக ஒற்­று­மை­யு­டன் பணி­யாற்­று­தல், புத்­தாக்­கச் சிந்­தனை, மேம்­பாட்­டுத் திறன், இந்­திய சிங்­கப்­பூ­ரர் அடை­யா­ளத்தை ஆழ­மா­கக் கண்­ட­றி­தல், தீர்வு காண்­பது போன்ற திறன்­களை மேம்­ப­டுத்­து­வதை இத்­திட்­டம் நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளது.

சிண்டா இளை­யர் மன்­றம் 17 வய­துக்­கும் 35 வய­துக்­கும் இடைப்­பட்ட இளை­யர்­களை அடை­யா­ளம் கண்டு, வருங்­கா­லத் தலை­வர்­களை அர­வ­ணைத்­துச் சமூ­கத்­திற்கு அவர்­கள் சேவை­யாற்ற ஊக்­கு­விக்க முனை­கிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்­தத் திட்­டத்­தில் பங்­கேற்­பா­ள­ராக இருந்த தா‌ஷினி சண்­மு­கம், இவ்­வாண்­டு திட்­டத்­தை இணைத் தலை­வ­ராக வழி­ந­டத்­தி­னார். அவ­ரு­டன் மிரு­துலா குமா­ரும் இணைந்து செயல்­பட்­டார்.

சிண்டா இளை­யர் மன்­றத் தலை­வர் துர்கா ராஜேந்­தி­ரன், 29, இந்த ஆண்­டுத் திட்­டத்­தின் ஆலோ­ச­

க­ராக இருந்­தார்.

"தங்­க­ளை­யும் தாண்­டிச் சமூ­கத்­தின் தேவை­களில் உங்­கள் நண்­பர்­களை அக்­கறை கொள்­ளச் செய்­யுங்­கள்," என்று அறி­வு­றுத்­தி­னார் துர்கா.

"உங்­கள் விருப்­பப்­படி எதிர்­கா­லத்தை வடி­வ­மைக்­கக்­கூ­டிய சக்தி உங்­க­ளுக்கு உள்­ளது. அதைக் குறைத்து எடை­போட வேண்­டாம்," என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!