காண்டாமிருகங்கள் இருந்த இடத்திற்குள் அத்துமீறியவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில், வெள்ளை காண்டா மிருகங்கள் வசிக்கும் பகுதிக்குள் சாகச செயல் புரிந்த 19 வயது வீ யீ காய் மீது இன்று (ஜூலை 12) நீதிமன்றத்தில் சேதம் விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி, பிற்பகல் 2.40 மணி அளவில் வீ காண்டாமிருகத்தின் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டது.குறும்புச்செயல் புரிந்த மேலும் இரு குற்றச்சாட்டுகளும் வீ மீது சுமத்தப்பட்டன.

கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி அதிகாலை 2.40 மணியளவில் புக்கிட் தீமா சாலையை அடுத்து சிக்ஸ்த் அவென்யூவில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒரு தகவல் பதாகை அடித்து உடைத்ததில் $900 சேதத்தை வீ ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அன்றைய தினம் காலை அருகிலுள்ள சிக்ஸ்த் கிரசெண்ட்டில் இரு கார்களின் பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு கிட்டத்தட்ட $2,800 சேதத்தையும், ஒரு பிஎம்டபிள்யூ காருக்கு $1,600க்கும் அதிகமான சேதத்தையும் ஏற்படுத்தியதாக வீ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 17ஆம் தேதி, மாலை 5.40 மணி அளவில், சம்பவம் குறித்து சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் புகார் அளித்திருந்ததாக போலிஸ் கூறியது.

தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் வீ அத்துமீறி நுழைந்து சாகசச் செயல் செய்த காணொளி டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அப்போது அவரது டிக்டாக் கணக்கை 33,000 பேர் பின்தொடர்ந்தனர்.

இத்தகைய சாகசங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம்

வீக்கு இன்று $15,000 பிணை நிர்ணயிக்கப்பட்டது. வழக்கு ஆகஸ்ட் 16க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!