'ஏபெக்' மெய்நிகர் சந்திப்பில் பிரதமர் லீ

'ஏபெக்' மெய்நிகர் சந்திப்பில் பிரதமர் லீ

1 mins read
2c624b46-f6f6-4173-a5dc-6759c479b38b
-

ஏபெக் தலை­வர்­க­ளுக்­காக நடத்­தப்­படும் மெய்­நி­கர் ஓய்­வுத்­தள சந்­திப்­பில் பிர­த­மர் லீ சியன் லூங்­கும் கலந்­து­கொள்­வார் என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று தெரி­வித்­தது.

21 ஆசிய-பசி­பிக் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு உறுப்­பிய நாடு­க­ளின் தலை­வர்­கள் இந்­தச் சந்­திப்­பில் கலந்­து­கொள்­கின்­ற­னர்.

இவ்­வாண்டு நவம்­பர் மாதத்­தில் ஏபெக் தலை­வர்­கள் அதி­கா­ர­பூர்வ சந்­திப்பை நடத்த இருக்­கின்­ற­னர். அதற்கு முன்பு ஒரு கலந்­து­ரை­யா­ட­லில் அவர்­கள் ஈடு­ப­டு­வது இதுவே முதல்­முறை.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின் தாக்­கத்­தைப் பற்றி பேச ஏபெக் தலை­வர்­க­ளி­டையே நில­வி­வ­ரும் விருப்­பத்தை இது பிர­தி­ப­லிப்­ப­தாக நியூ­சி­லாந்­துப் பிர­த­மர் ஜெசின்டா ஆர்­டன் தெரி­வித்­தார்.

"இரண்­டா­வது உல­கப் போருக்­குப் பிறகு கொவிட்-19 நெருக்­க­டி ­நி­லை­யால் ஏபெக் நாடு­க­ளின் பொரு­ளி­யல் மிக­வும் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

"81 மில்­லி­யன் பேர் தங்­கள் வேலை­களை இழந்­துள்­ள­னர். ஏபெக் நாடு­க­ளின் பொரு­ளி­யல் மீண்­டு­வர கூட்டு முயற்சி அவ­சி­யம்," என்று திரு­வாட்டி ஆர்­டன் தெரி­வித்­தார்.

பொரு­ளி­யல் மீட்­சியை சாத்­தி­ய­மாக்­க­வும் நீண்­ட­கால வளர்ச்­சியை நிலைபெற செய்­ய­வும் தேவை­யான ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைக்கு மெய்­நி­கர் சந்­திப்­பின்­போது அவர் அழைப்பு விடுக்க இருக்­கி­றார்.

சந்­திப்­புக்­குப் பிறகு மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டம் ஒன்று நடத்­தப்­படும். சந்­திப்­பின்­போது முன்­வைக்­கப்­பட்ட பரிந்­து­ரை­களும் எடுக்­கப்­பட்ட முடி­வு­களும் அதில் பகி­ர்ந்­து­கொள்­ளப்­படும்.

ஏபெக் நாடு­களில் 50 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நோ­யின் கார­ண­மாக ஏபெக் நாடு­களில் ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர் மாண்­டு­விட்­ட­னர்.