அறிவியல், சுகாதாரம் போன்ற விவகாரங்களில் மட்டும் பொய்ச் செய்திகளைப் பரப்புவோரின் கவனம் இனி இல்லை.
மாறாக, கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்கொள்ள அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி பொய்ச் செய்திகள் பரப்பப்படுகின்றன.
இத்தகைய பொய்ச் செய்தி
களைப் பிரதான ஊடகங்கள் எதிர்கொள்வதாகவும் உண்மையான செய்திகள் மக்களிடம் சென்றடைவதில் அவை கவனம் செலுத்துவதாகவும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அறிவியல், சுகாதாரம் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக வெளியாகும் பொய்ச் செய்திகளை எதிர்கொள்வதைவிட அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பரப்பப்படும் பொய்ச் செய்திகளை ஊடகங்கள் அதிகம் எதிர்கொள்வதாக ஆய்வு தெரிவித்தது.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு அறிவியல், சுகாதாரம் ஆகியவை தொடர்பான பொய்ச் செய்திகளை எதிர்கொண்டு தெளிவு
படுத்துவதில் பிரதான ஊடகங்கள் கவனம் செலுத்தி வந்ததாக சுகாதார அமைச்சு வழங்கிய நிதியால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு காட்டுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 30ஆம் தேதிவரை வெளிவந்த 2,000க்கும் அதிகமான செய்தி அறிக்கைகளை ஆய்வு நடத்தியோர் ஆராய்ந்தனர். கொவிட்-19 தொடர்பான பொய்ச் செய்திகளை எதிர்கொண்டு உண்மை நிலவரத்தைக் கூறும் 164 அறிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டது.
அவற்றில் 85 விழுக்காடு அறிக்கைகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் வெளிவந்தன. 24 விழுக்காடு அறிக்கைகள் சேனல் நியூஸ் ஏஷியாவில் வெளிவந்தன.

