கொவிட்-19 விதி மீறி மருத்துவமனையை விட்டு வெளியேறிய ஊழியருக்குச் சிறை

கொவிட்-19 விதி மீறி மருத்துவமனையை விட்டு வெளியேறிய ஊழியருக்குச் சிறை

2 mins read
7807f737-270d-4f56-9991-ec6155efbfba
பாலச்சந்திரன் பார்த்திபன். படம்: ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸ் -

கொவிட்-19 விதி­மு­றை­களை இரண்டு முறை மீறிய வெளி­நாட்டு ஊழி­யர் ஒரு­வ­ருக்கு தொற்­று­நோய் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் 9 மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 சந்­தே­கத்­தின் பேரில் மருத்­து­வ­மனை கொண்டு செல்­லப்­பட்­ட­போது ஒரு முறை­யும் அதன் பின்­னர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட இட­மாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்த தங்­கும்­வி­டு­தியை விட்டு ஒரு­மு­றை­யும் பாலச்­சந்­தி­ரன் பார்த்­தி­பன் விதி­மு­றை­களை மீறி வெளி­யே­றி­னார்.

மருத்­து­வ­ம­னையை விட்டு வெளி­யே­றி­ய­போது, சாங்கி விமான நிலைத்­துக்­குச் சென்று இந்­தியா திரும்ப அவர் டிக்­கெட் வாங்க முயன்­றார்.

தொற்­று­நோய் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் இரண்டு குற்­றச்­சாட்­டு­களை பாலச்­சந்­தி­ரன் நேற்று ஒப்­புக் கொண்­ட­தைத் தொடர்ந்து அவ­ருக்கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு மே 23ஆம் தேதி உடல்­ந­லம் சரி­யில்லை என்று பாலச்­சந்­தி­ரன் தெரி­வித்­தி­ருக்­கி­றார். தமது தங்­கு­வி­டு­தி­யில் சில­ருக்கு கிரு­மி தொற்­றி­யி­ருந்­த­தால் தமக்­கும் தொற்று இருக்­கக்­கூ­டும் என்­றும் அவர் சந்­தே­கப்­பட்­டார்.

ஆம்­பு­லன்­சில் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச்­செல்­லப்­பட்ட அவ­ருக்கு கிரு­மிப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. பரி­சோ­தனை முடி­வு­க­ளுக்­கா­கக் காத்­தி­ருக்க பிற்­ப­க­லில் அவர் மருத்­து­வ­ம­னை­யின் வேறொரு பகு­திக்கு மாற்­றப்­பட்­டார்.

பரி­சோ­தனை முடி­வு­கள் வெளி­வ­ரும் வரை அங்­கி­ருந்து வெளி­யே­றக்­கூ­டாது என்று தாதி­கள் ஆங்­கி­லத்­தி­லும் தமி­ழி­லும் அவ­ரி­டம் கூறி­ய­போ­தும் அவர் அங்­கி­ருந்து வெளி­யேறி, தியோங் பாரு வரை நடந்து பொதுப் பேருந்­தில் ஏறி­னார். இரண்டு பேருந்து நிறுத்­தங்­க­ளுக்­குப் பிறகு இறங்­கிய அவர், டாக்­சி­யில் சாங்கி விமான நிலை­யம் சென்­றார். அங்­கு­தான் இந்­தியா திரும்ப விமான டிக்­கெட்டு வாங்க முயன்­றி­ருக்­கி­றார். ஆனால் டிக்­கெட்டு கிடைக்­க­வில்லை.

நான்கு மணி­நே­ரம் விமான நிலை­யத்­தில் சுற்­றித் திரிந்த அவரை போலி­சார் பிடித்­த­னர். மறு­நாள் அவ­ருக்கு கொவிட்-19 கிருமி உறுதி செய்­யப்­பட்­டது.

குணம் அடைந்த பின்­னர், ஜூன் 8ஆம் தேதி தங்­கு விடு­திக்­குத் திரும்­பிய பாலச்­சந்­தி­ர­னுக்கு, 14 நாள் விடுப்பு அளிக்­கப்­பட்­டது. அந்­நே­ரத்­தில் அவர் எங்­கும் செல்­லக்­கூ­டாது என்­பது விதி­முறை. ஆனால் ஜூன் 16ம் தேதி, இந்­தியா திரும்­பும் எண்­ணத்­தில் தங்­கும் விடு­தியை விட்டு பெட்­டி­க­ளு­டன் வெளி­யே­றி­னார். மீண்­டும் விான நிலை­யத்­துக்­குச் சென்­ற­வ­ருக்கு, மீண்­டும் டிக்­கெட்டு கிடைக்­க­வில்லை.

விமான நிலை­யத்­தில் தூங்­கி­விட்டு தெம்­ப­னி­சில் உள்ள உற­வி­னர் வீட்­டுக்­குச் சென்­றார். அங்கு உற­வி­ன­ரி­டம் உண்­மை­யைச் சொல்ல, அவர் பாலச்­சந்­தி­ர­னின் மேல் அதி­கா­ரி­யைத் தொடர்­பு­கொண்­டார். போலி­சார் பின்­னர் அவரை அந்த வீட்­டி­லி­ருந்து கொண்டு சென்­ற­னர்.

இந்த வழக்கை மிக­வும் அதிர்ச்சி அளிக்­கக் கூடி­யது என்று வரு­ணித்த அர­சாங்­கத் துணை வழக்­க­றி­ஞர் நார்­மன் இயூ, ஊழி­யர் தங்­கு­வி­டு­திக்கோ மருத்­து­வ­ம­னைக்கோ திரும்­பா­மல், அவர் சாங்கி விமான நிலை­யத்­தில் சுற்றித் திரிய முடிவு செய்­த­தைச் சுட்­டிக்­காட்­டி­னார். அதன்­வழி கொவிட்-19 கிரு­மி­யைப் பரப்­பும் அபா­யத்தை அவர் அதி­க­ரித்­தார் என்று கூறி­னார்.