'மகன்' போன்ற முன்னாள் மாணவரிடம் பாலியல் அத்துமீறல்

'மகன்' போன்ற முன்னாள் மாணவரிடம் பாலியல் அத்துமீறல்

1 mins read
4ee3b5fd-6a29-49fc-a43f-9319a584deac
-

தமது முன்னாள் மாணவர் தொடக்கப் பள்ளியை விட்டு சென்றபோதும் அவருடன் நெருங்கிப் பழகி, பின்னர் அவரை மானபங்கம் செய்த வழக்கில் முன்னாள் ஆசிரியர் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பில் மாணவரின் வகுப்பு ஆசிரியராக இருந்த முன்னாள் ஆசிரியர் அவரை தமது மகன் போல பாவித்து, நிதி உதவி செய்தார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. மாணவர் உயர் நிலைப் பள்ளி சென்ற போதும் அவரிடம் நெருக்கமாக இருந்தார். ஆனால் 2017 ஜூன் விடுமுறையில் தமது வீட்டில் இரவு தங்க வந்த முன்னாள் மாணவரிடம் பாலியல் அத்துமீறல் புரிந்தார் தற்போது 36 வயதுள்ள முன்னாள் ஆசிரியர். பாலியல் அத்து மீறலின் தொடர்பில் இரு குற்றங்கள் புரிந்தார் என்றும் ஒருமுறை அதற்கு முயற்சி செய்தார் என்றும் கண்டறியப்பட்டது. மாணவர், முன்னாள் ஆசிரியர், சம்பந்தப்பட்ட பள்ளி பற்றிய விவரங்களை வெளியிட நீதிமன்றத் தடை உள்ளது.