தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாகசச் செயலால் அத்துமீறல்: இளையர்மீது குற்றச்சாட்டு

2 mins read
61387416-0346-42a4-aa21-2a0a72cc114e
19 வயது வீ யீ காய் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தில், வெள்ளை காண்­டடாமி­ரு­கங்­கள் வசிக்­கும் பகு­திக்­குள் சாகச செயல் புரிந்த 19 வயது வீ யீ காய் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் சேதம் விளை­வித்­தது உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

கடந்த டிசம்­பர் மாதம் 17ஆம் தேதி, பிற்­ப­கல் 2.40 மணி அள­வில் வீ காண்­டா­மி­ரு­கத்­தின் பகு­திக்­குள் அத்­து­மீறி நுழைந்­த­தாகக் கூறப்­பட்­டுள்ளது.

குறும்­புச்­செ­யல் புரிந்த மேலும் இரு குற்­றச்­சாட்­டு­களும் வீ மீது சுமத்­தப்­பட்­டன.

கடந்த அக்­டோ­பர் 9 ஆம் தேதி அதி­காலை 2.40 மணி­ய­ள­வில் புக்­கிட் தீமா சாலையை அடுத்து சிக்ஸ்த் அவென்­யூ­வில் உள்ள ஒரு பேருந்து நிறுத்­தத்­தில் ஒரு தக­வல் பதாகையை அடித்து உடைத்­த­தில் $900 சேதத்தை வீ ஏற்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அன்­றைய தினம் காலை அரு­கி­லுள்ள சிக்ஸ்த் கிர­சென்ட்­டில் இரு கார்­க­ளின் பக்கவாட்டு கண்­ணா­டியை அவர் உடைத்து சேதப்­ப­டுத்­தி­ய­தா­க­வும் கூறப்­படு­கிறது. ஒரு மெர்­சி­டிஸ் பென்ஸ் காருக்கு கிட்­டத்­தட்ட $2,800 சேதத்­தை­யும், ஒரு பிஎம்­ட­பிள்யூ காருக்கு $1,600க்கும் அதி­க­மான சேதத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­ய­தாக வீ மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

கடந்த டிசம்­பர் 17ஆம் தேதி, மாலை 5.40 மணி அள­வில், சம்­ப­வம் குறித்து சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டம் புகார் அளித்­தி­ருந்­த­தாக போலிஸ் கூறி­யது.

தடை­செய்­யப்­பட்ட பகு­திக்­குள் வீ அத்­து­மீறி நுழைந்து சாக­சச் செயல் செய்த காணொளி டிக்­டாக்­கில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது. அப்­போது அக்­கா­ணொ­ளியை 33,000 பேர் பின்­தொ­டர்ந்­த­னர்.

இத்­த­கைய சாக­சங்­கள் உயி­ரா­பத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்­ப­தால் இது­போன்ற செயல்­களில் ஈடு­பட வேண்­டாம் என்று சிங்­கப்­பூர் வன­வி­லங்­குக் காப்­ப­கம் மக்­களை வலி­யு­றுத்­தி­யது.

வீக்கு நேற்று $15,000 பிணை நிர்­ண­யிக்­கப்­பட்­டது. வழக்கு ஆகஸ்ட் 16க்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­மீறி நுழைந்த குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டால், மூன்று மாதங்­கள்­ வரை சிறை, $1,500 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

சேதம் விளை­வித்­த குற்றத்துக்கு $2,000வரை அப­ரா­தம் அல்­லது மூன்று ஆண்­டு­கள் வரை சிறை மற்­றும் மூன்று முதல் எட்டு பிரம்­ப­டி­கள் வரை விதிக்­கப்­ப­ட­லாம்.

ஒவ்­வொரு குறும்­புச் செய­லுக்­கும், ஓராண்­டு­வரை சிறை­யும், அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.