சிங்கப்பூர் குவாரியிலுள்ள ஒரு கற்பாரையின் பகுதி உடைந்தது

சிங்கப்பூர் குவாரியிலுள்ள ஒரு கற்பாரையின் பகுதி உடைந்தது

1 mins read
a7542f0e-9c70-4861-b577-53e03b7fa050
-

டேஸி பார்ம் இயற்கைப் பூங்காவிலுள்ள சிங்கப்பூர் குவாரியிலுள்ள ஒரு கற்பாரையின் பகுதி நேற்று முன்தினம் உடைந்து அதற்கு எதிரில் இருக்கும் ஏரிக்குள் விழுந்தது.

அப்போது அந்த இடத்தில் இருந்த ஏட்ரியன் குவா என்பவர், இதனைப் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்தார். அந்தப் பகுதி உடைந்து விழுந்த பிறகு கற்பாறை எப்படி உள்ளது என்பதைக் காட்டும் படத்தை அவர் பதிவேற்றம் செய்தார்.

இந்தச் சம்பவம் மாலை கிட்டத்தட்ட ஐந்து மணிக்கு நடந்ததாக திரு குவா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது கூறினார்.

பாறையின் நிலைத்தன்மை தொடர்ந்து ஆராயப்படும் என தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.