குன்று உச்சியின் ஒரு பகுதி பெயர்ந்து ஏரியில் விழுந்தது

குன்று உச்சியின் ஒரு பகுதி பெயர்ந்து ஏரியில் விழுந்தது

1 mins read
a4a37e3a-5f3e-402f-8cc7-96a04f6d74d1
-

டெய்சி ஃபார்ம் காட்டுப் பகுதியில் உள்ள சிங்கப்பூர் குவாரி குன்று உச்சியின் ஒரு பகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெயர்ந்து ஏரியில் விழுந்தது.

அதைப் பார்த்த ஏட்ரியன் குவா என்ற மலையேறி ஃபேஸ்புக் பக்கத்தில் அதே நாளன்று அந்தச் சம்பவத்தை விவரித்து படம் ஒன்றையும் வெளியிட்டார்.

அந்தச் சம்பவம் அன்று மாலை 4.58 மணிக்கு முன்னதாக நிகழ்ந்தது என்று திரு குவா கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று தெரிவித்தது.

அதைக் கண்டதும் தனக்கு அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சம்பவம் நிகழ்ந்த பகுதி அடைக்கப்பட்டு இருக்கிறதா என்று கேட்டதற்குப் பதிலளித்த தேசிய பூங்காக் கழகம், ஏரியின் இந்தப் பக்கம் இருந்து அந்த குன்றைப் பார்ப்பதற்கான மேடை மூடப்படவில்லை என்று தெரிவித்தது.

இருந்தாலும் அந்த குன்று பகுதியின் நிலவரங்களை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.