துவாசில் பெரிய சாதனங்கள் மறுசுழற்சி ஆலை

துவாசில் பெரிய சாதனங்கள் மறுசுழற்சி ஆலை

1 mins read
ceb6ae9e-175f-4767-b25a-b2b3bb2ff1d4
-

வீட்டில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டி அல்லது சலவை இயந்திரம் போன்ற பெரிய பொருட்களை இப்போது துவாசில் உள்ள மிகவும் ஆற்றல்மிக்க ஆலையில் மறு சுழற்சிக்குத் தயார்படுத்த முடியும்.

சிங்கப்பூரில் முதன்முத லாக அமையும் இடபிள்யுஆர்2 என்ற அந்த ஆலை பெரும் பெரும் குடும்ப பொருட்களை மறுசுழற்சிக்கு உட்படுத்தும் தானியக்க ஆலையாக இருக்கும். ஆலை ஏறத்தாழ 47,420 சதுரஅடி பரப்பளவைக் கொண்டது. இந்த ஆண்டு மார்ச்சில் செயல்படத் தொடங்கியது.

மனிதவளத்தைக் குறைக்கும் வகையில் சிறப்பு வாய்ந்த சாதனங்களையும் இயந்திரங்களையும் அந்த ஆலை பயன்படுத்துகிறது.

தானியக்க ஆலை மூலம் பழைய பொருட்களில் 95 விழுக்காட்டு பொருட்களை மீட்டு அவற்றை மறுசுழற்சியில் ஈடுபடுத்த முடியும். எஞ்சிய பொருட்கள் எரிக்கப்பட்டுவிடும்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் அந்த ஆலையை நேற்றுப் பார்வையிட்டார்.