தெமாசெக் துடிப்பான செயல்பாடு

தெமாசெக் துடிப்பான செயல்பாடு

2 mins read
0432ce9e-7c02-4c3b-b549-d3d72f491234
-

சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த பேருதவி

கொவிட்-19 பர­வல் சூழ­லில் சிங்­கப்­பூ­ரி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் சமூ­கத்­தி­ன­ரைப் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­ப­தில் தெமா­செக்­கும் அது முத­லீடு செய்­துள்ள நிறு­வ­னங்­களும் துடிப்­பு­டன் பங்­காற்றி வரு­கின்­றன.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, தள­வாடம், மருந்­தி­யல் ஆராய்ச்சி போன்ற துறை­களில் கடந்த ஓராண்­டுக்­கும் மேலா­கத் தனது நிறு­வ­னங்­கள் எடுத்து வரும் முயற்­சி­களை நேற்று இடம்­பெற்ற வரு­டாந்­திர மறு­ஆய்­வில் அர­சாங்க முத­லீட்டு அமைப்­பான தெமா­செக் பட்­டி­ய­லிட்­டது.

சிங்­கப்­பூ­ரில் முகக்­க­வ­சம், கைச்­சுத்­தி­க­ரிப்­பான் விநி­யோக நட­வடிக்­கை­களை மேற்­கொண்­ட­தோடு, உள்­ளூ­ரி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­த­னைத் தொகுப்­பு­க­ளை­யும் தனி­ந­பர் பாது­காப்பு அங்­கி­க­ளை­யும் அது நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளது.

இது­நாள்­வரை, ஒரு மில்­லி­யனுக்­கும் மேற்­பட்ட முறை கொரோனா பரி­சோ­தனை செய்­யும் வகை­யில், ஆசி­யா­வி­லும் அதற்­கப்­பா­லும் 40 நாடு­க­ளுக்கு 6,300 பரி­சோ­த­னைத் தொகுப்­பு­களை தெமா­செக் நன்­கொடை அளித்­துள்­ளது.

தெமா­செக் முத­லீடு செய்­துள்ள நிறு­வ­னங்­களில் ஒன்­றான பயோ­என்­டெக் தடுப்­பூசி தயா­ரிப்பு நிறு­வனம், உல­க­ள­வில் கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான போரில் துடிப்­பு­டன் செயல்­பட்டு வரு­கிறது. ஃபைசர் நிறு­வ­னத்­து­டன் இணைந்து அந்­நி­று­வ­னம் உரு­வாக்­கிய தடுப்­பூசி சிங்­கப்­பூர் உட்­பட உல­கின் பல நாடு­க­ளி­லும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது.

தெமா­செக் முத­லீடு செய்­துள்ள பிஎஸ்ஏ இன்­டர்­நே­ஷ­னல், சிங்­எக்ஸ் போன்ற நிறு­வ­னங்­களும் முக்­கி­யப் பங்­காற்­றின. கொரோனா நோயாளி­களைத் தங்­க­வைப்­ப­தற்­காக சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வில் சமூ­கப் பரா­ம­ரிப்­பி­டம் அமைத்­த­தில் அவை பெரும்­பங்­காற்­றின.

இன்­னொரு நிறு­வ­ன­மான டி'கிரிப்ட், தானா­கவே தொடர்­பு­களின் தட­ம­றி­யும் கரு­வியை உரு­வாக்­கி­யது. குடி­யி­ருப்­பா­ளர்­கள், வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டுதி­களின் பணி­யா­ளர்­கள் போன்­றோர் பயன்­ப­டுத்­தும் வகை­யில் 835,000க்கும் மேற்­பட்ட அக்­க­ரு­வி­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

"நம் மக்­கள் வெளிப்­ப­டுத்­திய பொது உணர்­வால் நான் பெரி­தும் ஊக்­கு­விக்­கப்­பட்­டேன். இந்த இக்­கட்­டான சூழ­லில் நம் சமூ­கங்­களைப் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­ப­தில் உதவ அவர்­கள் தாமாக முன்­வந்து தொண்­டூ­ழி­யம் புரிந்­த­னர்," என்­று தெமா­செக் தலை­வர் லிம் பூன் ஹெங் குறிப்பிட்டார்.

தெமா­செக் அற­நி­று­வ­னம், சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ், உலக உண­வுத் திட்­டம் ஆகிய அமைப்­பு­கள் செய்து­கொண்ட பங்­கா­ளித்­து­வத்­தின்­மூலம் சென்ற ஆண்­டில் 40 மனி­தா­பி­மான விமா­னங்­களை இயக்க ஆத­ரவு வழங்­கப்­பட்­டது.

அவை மருந்­துப்­பொ­ருள்­கள், தனி­ந­பர் பாது­காப்பு அங்­கி­கள், இதர இன்­றி­ய­மை­யாத் தேவை­கள் போன்­ற­வற்றை இந்­தியா, நேப்­பாளம், பங்­ளா­தேஷ், இந்­தோ­னீ­சியா போன்ற வெளி­நா­டு­க­ளுக்கு எடுத்துச் சென்­றன.

இத­னி­டையே, சென்ற ஆண்­டில் தெமா­செக் ஹோல்­டிங்ஸ் பங்­கு­தாரர்­க­ளுக்­கான ஆண்டு ஈவு 24.53% என மீண்­டெ­ழுந்­தது. அத்­து­டன், புதிய சாதனை அளவாக தெமா­செக்­கின் நிகர சந்தை மதிப்பு $381 பில்­லி­யனாக உயர்ந்­தது.