11,000 உயிர்வாயுச் செறிவூட்டிகள் இந்தோனீசியாவிற்கு நன்கொடை

11,000 உயிர்வாயுச் செறிவூட்டிகள் இந்தோனீசியாவிற்கு நன்கொடை

1 mins read
1f91be32-0c66-4c20-baa1-20f275dc8fa7
-

இந்­தோ­னீ­சி­யா­வில் கொவிட்-19 பர­வல் நாளுக்கு நாள் உச்­சத்தை எட்டி வரு­கிறது. இதற்­கு­முன் இல்­லாத வகை­யில் அந்நாட்டில் நேற்று 47,899 பேர் புதி­தாக கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்; 864 பேர் உயிரிழந்தனர்.

இதை­ய­டுத்து, கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரில் இந்­தோ­னீ­சி­யா­விற்­குக் கைகொ­டுக்க சிங்­கப்­பூர், இந்­தோ­னீ­சிய நிறு­வ­னங்­கள் கைகோத்­துள்­ளன.

அவ்­வ­கை­யில், தெமா­செக் அற­நி­று­வ­னம், இரு நாடு­க­ளை­யும் சேர்ந்த 15 நிறு­வ­னங்­க­ளு­டன் சேர்ந்து 11,000 உயிர்­வா­யுச் செறி­வூட்­டி­களை இந்­தோ­னீ­சி­யா­விற்கு நன்­கொ­டை­யாக வழங்­கு­கிறது. முதற்­கட்­ட­மாக 1,500 செறி­வூட்­டி­கள் இன்­றைக்­குள் இந்­தோ­னீசி­யா­வைச் சென்­ற­டை­யும். எஞ்­சி­யவை கட்­டங்­கட்­ட­மாக வரும் வாரங்­களில் அனுப்பி வைக்­கப்­படும் என்று தெமா­செக் அற­நி­று­வ­னம் தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், ஆறு கொள்­கலன் திரவ உயிர்­வாயு, உயிர்­வா­யுச் செறி­வூட்­டி­கள், உயிர்­வா­யுக் கலன்­களை வரும் நாள்­களில் ஜகார்த்­தா­விற்கு அனுப்பி வைக்க இந்தோ­னீ­சி­யா­வில் உள்ள சிங்­கப்­பூர் வர்த்­தக, தொழிற்­சபை நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தாக (சிங்­சேம்) அதன் துணைத் தலை­வர் ஜோயல் ஷென் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, இந்­தோ­னீ­சி­யா­விற்கு 1,000 உயிர்­வா­யுச் செறி­வூட்டி­களை நன்­கொ­டை­யாக வழங்கு­வ­தாக டிபி­எஸ் வங்கி தெரி­வித்து இருக்­கிறது.

"கைகோத்­துச் செயல்­ப­டு­வ­தன்­மூ­லம், ஆக மோச­மான கொவிட்-19 பர­வ­லில் இருந்து விரை­வில் மீள முடி­யும் என நம்­பு­கி­றோம்," என்று டிபி­எஸ் வங்­கி­யின் தலைமை நிர்­வாகி பியூஷ் குப்தா கூறி­யுள்­ளார்.

முன்­ன­தாக, இந்­தோ­னீ­சி­யா­வு­டன் வலு­வான உற­வு­கொண்­டுள்­ள­தைக் குறிப்­பி­டும் வித­மாக, கடந்த வாரம் மருந்­துப் பொருள்­கள் அடங்­கிய இரு விமா­னங்­க­ளைச் சிங்­கப்­பூர் அந்­நாட்­டிற்கு அனுப்பி வைத்­தது.