தீவின் பல பகுதிகளிலும் நேற்று இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், ஈசூன் ஸ்திரீட் 61, புளோக் 645க்கு அருகே காலை 8.10 மணியளவில் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதில் யாரும் காயமடையவில்லை என்றும் பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படவில்லை என்றும் ஃபேஸ்புக் வழியாக நீ சூன் நகர மன்றம் தெரிவித்தது. மரம் விழுந்ததால் அப்பகுதியில் வாகனப் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விழுந்த மரத்தை அப்புறப்படுத்தவும் அப்பகுதியில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாக தனது சொத்து நிர்வாகக் குழுவையும் ஒப்பந்ததாரரையும் உடனடியாக அங்கு அனுப்பி வைத்ததாக நகர மன்றம் கூறியது. இதற்கிடையே, நான்கு தள உயரம் கொண்ட ஒரு மரம், புக்கிட் பாத்தோக் அவென்யூ 4, புளோக் 417 கார் நிறுத்தப் பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு மோட்டார் சைக்கிள்கள்மீது விழுந்ததாக லியன்ஹ சாவ்பாவ் நாளிதழ் செய்தி தெரிவித்தது. படம்: ஃபேஸ்புக்/முகம்மது ஃபைசால் இப்ராஹிம்
இடைவிடா மழையில் வேரோடு பெயர்ந்த மரம்
1 mins read
-

