‘உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்’

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களிடம் பிரதமர் லீ பேசினார்

ஜப்­பா­னி­யத் தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் நடை­பெ­ற­வுள்ள ஒலிம்­பிக் விளை­யாட்­டு­க­ளி­லும் உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான ஒலிம்­பிக் விளை­யாட்­டு­க­ளி­லும் பங்­கேற்­க­வுள்ள சிங்­கப்­பூர் வீரர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கு­மாறு பிர­த­மர் லீ சியன் லூங் சிங்­கப்­பூ­ரர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

விளை­யாட்­டு­களில் பங்­கேற்­க­வுள்ள வீரர்­க­ளு­டன் அண்­மை­யில் மெய்­நி­கர் வடி­வில் பேச­மு­டிந்­த­தாக அவர் ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டார். ஒலிம்­பிக் விளை­யாட்­டு­கள் இம்­மா­தம் 23ஆம் தேதி­யி­லி­ருந்து அடுத்த மாதம் மூன்­றாம் தேதி வரை நடை­பெ­றும். 12 விளை­யாட்­டு­களில் பங்­கேற்க 23 வீரர்­கள் தகு­தி­பெற்­றுள்­ள­னர்.

உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான ஒலிம்­பிக் விளை­யாட்­டு­கள் அடுத்த மாதம் 24ஆம் தேதி முதல் செப்­டம்­பர் ஐந்­தாம் தேதி வரை நடை­பெ­றும். அவற்­றில் பங்­கேற்க இது­வரை 10 சிங்­கப்­பூ­ரர்­கள் தகு­தி­பெற்­றுள்­ள­னர். கிரு­மிப் பர­வ­லால் இந்த ஆண்டு ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களை நடத்து­வது மிக­வும் சவா­லாக அமைந்­துள்­ளது எனத் திரு லீ குறிப்­பிட்­டார். பட­கோட்­டப் போட்­டி­யா­ளர் ஜொவேன் போ, டான் டொக் செங் மருத்­து­வ­ம­னை­யில் தாதி­யா­கப் பணி­பு­ரி­கி­றார்.

அவ­ரைப் போல் கொவிட்-19 போராட்­டத்­தில் முன்னிலையில் இருந்து பணி­யாற்­று­வோர் எதிர்­கொள்­ளும் சவால்­கள் அதி­கம் என்பதை அவர் சுட்­டி­னார். நமது விளை­யாட்டு வீரர்­கள் மன­வு­று­தி­யு­டன் பயிற்­சி­களை மேற்­கொண்­டுள்­ள­னர், விளை­யாட்­டு­களில் பங்­கேற்­க மிகுந்த ஆர்வத்துடன் இருக்­கின்­ற­னர் எனப் பிர­த­மர் சொன்­னார். செய­லில் இருக்­கும் கவ­னம், சூழ்­நி­லைக்­கேற்ப தங்­களை மாற்­றிக்­கொள்­ளும் ஆற்­றல் போன்ற அவர்­க­ளின் குணா­தி­சயங்­கள் பிறருக்கு நம்­பிக்­கை­யூட்­டுபவை எனத் திரு. லீ கூறனார்.

முக்­கு­ளிப்பு, நெடுந்­தொ­லைவு நீச்­சல் உள்­ளிட்ட ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் சிங்­கப்­பூர் முதன்­மு­றை­யா­கப் பங்­கேற்­கவுள்ளது. அவற்­றில் 21 சிங்­கப்­பூர் வீரர்­கள் பங்­கேற்­க­வி­ருப்­ப­தைத் திரு. லீ குறிப்­பிட்­டார்.

காணொளி வாயி­லா­கப் பிர­த­மர் லீ, சிங்­கப்­பூர் விளை­யாட்டு வீரர்­களுக்கு வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!