இஸ்தானாவில் மீண்டும் பொது வரவேற்பு

இஸ்தானாவில் மீண்டும் பொது வரவேற்பு

1 mins read
fd98cf46-5832-41aa-95a5-d75de708881e
-

தேசிய தினக் கொண்­டாட்­டங்­களை முன்­னிட்டு அடுத்த மாதம் ஒன்­றாம் தேதி­யன்று இஸ்­தானா அதி­பர் மாளி­க­ளை­ வளாகத்தில் மீண்­டும் பொது வர­வேற்பு தினம் நடைபெறவுள்ளது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தொடர்­ந்து சென்ற ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தில் இஸ்­தானா மாளிகை வளாகம் பொது­மக்­க­ளுக்கு மூடப்­பட்­டது.

இந்த ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி­யன்று மீண்­டும் பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­வி­டத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், இரண்­டாம் கட்ட உயர் விழிப்­பு­நிலை நடப்­புக்கு வந்த பிறகு திட்­டம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

மே 13ஆம் தேதியன்று இஸ்­தா­னா­விற்­குச் செல்வதற்கான நுழை­வுச்­சீட்­டு­களை வைத்­தி­ருப்­போர் மட்­டும் அடுத்த மாதம் ஒன்­றாம் தேதி­யன்று அங்கு செல்­ல­மு­டி­யும். கொவிட்-19 பாது­காப்பு நடை­மு­றை­க­ளு­டன் பொது வர­வேற்பு தினம் நடை­பெ­றும்.

கேளிக்கை நட­வ­டிக்­கை­கள், உணவு, பானக் கடை­கள் உள்­ளிட்­டவை இடம்­பெ­றாது.