மின்சாரத்தில் இயங்கவுள்ள பூங்கா பேருந்துகள்

மின்சாரத்தில் இயங்கவுள்ள பூங்கா பேருந்துகள்

2 mins read
589bfdf4-5e0b-4a76-9131-1768eeae32f1
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் இயங்கும் பூங்காப் பேருந்து. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் விலங்கியல் தோட்­டம், ரிவர் சஃபாரி, நைட் சஃபாரி, ஜூரோங் பற­வைப் பூங்கா ஆகி­ய­வற்­றில் இருக்­கும் டிராம் எனப்­படும் பூங்­காப் பேருந்­து­கள் அனைத்­தும் இந்த ஆண்­டி­று­திக்­குள் மின்­சா­ரத்­தில் இயங்­க­வுள்­ளன. கரி­ம வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைக்­கும் நோக்­கு­டன் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த போக்கு­வரத்­துச் சேவை­களை வழங்­கு­வது சிங்­கப்­பூர் வன­வி­லங்­குக் காப்­ப­கத்­தின் இலக்கு. மாற்­றத்­தால் மொத்­தம் 30 பூங்­காப் பேருந்துகள் பாதிக்­கப்­படும். விலங்கியல் தோட்­டம் உட்­பட மண்­டா­யில் உள்ள மூன்று பூங்­காக்­க­ளின் 24 பேருந்­து­க­ளும் பறவைப் பூங்­கா­வின் ஆறு பேருந்­து­களும் அவற்­றில் அடங்­கும்.

24 பேருந்­து­கள் ஏற்­கெ­னவே டீசல் எரி­பொ­ரு­ளுக்­குப் பதி­லாக மின்­சா­ரத்­தில்­தான் இயங்­கி­வ­ரு­கின்­றன. அத­னால் ஆண்­டு­தோறும் பூங்­காப் பேருந்­து­கள் வெளி­யேற்­றும் கரி­ம வாயு­வின் அளவு 24 விழுக்­காடு குறைந்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பேருந்­து­கள் மட்­டு­மின்றி 2025ஆம் ஆண்­டுக்­குள் லாரிகள், 'பகி' எனப்­படும் பூங்­கா­விற்­குள் இயங்­கும் சிறு வாக­ன­ங்கள் உட்­பட தனது அனைத்து வாக­னங்­க­ளை­யும் மின்­சா­ரத்­தில் இயங்க வைப்­பது வன­வி­லங்­குக் காப்­ப­கத்­தின் இலக்கு. சில வெளி நிறு­வ­னங்­களும் பூங்­காக்­க­ளுக்­குச் செல்ல பேருந்­துச் சேவை­களை வழங்­கி­வ­ரு­கின்­றன. 2025ஆம் ஆண்­டுக்­குள் அந்­தப் பேருந்­து­க­ளை­யும் மின்­சா­ரத்­தில் இயங்க வைக்க வன­வி­லங்­குக் காப்­ப­கம் அந்­நி­று­வ­னங்களுடன் இணைந்து செயல்­பட்­டு­வ­ரு­கிறது.

இத்­த­கைய சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த செயல்­கள் இயற்­கைப் பகுதி­களை அழி­யா­மல் பார்த்­துக்­கொள்­ளும் என்று வன­வி­லங்­குக் காப்­ப­கம் கூறியது. மின்­சா­ரத்­தில் இயங்­கும் பேருந்­து­க­ளால் பூங்­காக்­களில் காற்று கூடு­தலாகச் சுத்­த­மாக இருக்­கும். காற்றை சுவா­சித்­தாலே பூங்­காக்­களில் வேலை செய்­வோ­ருக்­கும் அவற்­றைச் சுற்­றிப் பார்க்க வரு­வோ­ருக்­கும் வித்­தி­யா­சம் தெரிந்­து­விடும் எனக் காப்­ப­கம் குறிப்­பிட்­டது. சிங்­கப்­பூர் வன­வி­லங்­குக் காப்­ப­கத்­தின் பூங்­காப் பேருந்­து­கள் சேவை, சுற்­றிப் பார்க்க வரு­வோ­ரி­டையே அதி­கம் பிர­ப­ல­மாக இருக்­கும் ஒன்று. அவை பூங்­கா­வின் முக்­கி­யப் பகு­தி­க­ளுக்கு மக்­களை அழைத்துச் செல்­லும். பூங்­கா­வின் பரப்­ப­ள­வைப் பொறுத்து ஒவ்­வொரு பேருந்­தி­லும் அதி­க­பட்­ச­மாக 40 அல்­லது 70 பேர் பய­ணம் செய்யலாம்.

தனது வாக­னங்­களை மின்­சா­ரத்­தில் இயங்­கச் செய்­வ­து­டன், வன­வி­லங்­குக் காப்­ப­கம், மண்­டா­யில் அதன் பூங்­காக்­களில் அமைந்­தி­ருக்­கும் பொது­மக்­க­ளுக்­கான வாகன நிறுத்­து­மி­டங்­களிலும் ஐந்து விழுக்­காட்டை மின்­சார வாக­னங்­க­ளுக்­காக ஒதுக்­கி­வைத்­துள்­ளது. ஓட்­டு­நர்­கள் அவற்­றில் தங்­கள் வாக­னங்­க­ளுக்கு மின்­னேற்­ற­லாம். இனி மின்­சார வாக­னங்­கள் தொடர்ந்து பயன்­ப­டுத்­தப்­படும் என்­பது வன­வி­லங்­குக் காப்­ப­கத்­தின் நம்­பிக்கை. மேலும், பூங்காக்களில் விலங்­கு­களுக்­குத் தரப்­படும் உணவு போன்ற அம்­சங்­க­ளி­லும் காப்­ப­கம் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த தெரிவு­க­ளைச் செய்து­வ­ரு­கிறது.