மியன்மாரிலிருந்து சிங்கப்பூருக்கு வர தடை

மியன்மாரிலிருந்து சிங்கப்பூருக்கு வர தடை

1 mins read
6f6acda3-6945-43fe-81d0-26be3ade3a9f
-

மியன்மாரில் அதிகரித்துள்ள கொவிட்-19 பரவலால் பாதிப்படைந்துவரும் பயணிகள், நாளை (ஜூலை 15) முதல் சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படமாட்டர்கள் என்று சுகாதார அமைச்சு புதன்கிழமையன்று தெரிவித்தது.

வியாழன் இரவு 11. 59 மணி முதல் நீண்ட கால அட்டைதாரர்களும் மியன்மாருக்கு பயணம் (இடைப்பயணமும் கூட) செய்த குறுகிய கால வருகையாளர்களும் இந்நாட்டுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்த புதிய விதிமுறை, ஏற்கெனவே சிங்கப்பூருக்குள் வர முன்னதாக அனுமதி பெற்றவர்களுக்கும் பொருந்தும் என்று சுகாதார அமைச்சு கூறியது.

ஏற்கெனவே அங்கிருந்து இங்கு வந்தவர்கள் 14 நாட்கள் நீடிக்கும் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவு செய்யவேண்டும். அத்துடன் அவர்கள் பீசிஆர் சோதனையும் செய்யவேண்டும் என்றது சுகாதார அமைச்சு.