கொவிட்-19 உள்ள ஒருவரைக் கொண்ட கப்பல் திரும்பியது

கொவிட்-19 உள்ள ஒருவரைக் கொண்ட கப்பல் திரும்பியது

1 mins read
ed246e98-1f87-4400-b536-6ef0b15a7354
-

ட்ரீம்க்ரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கப்பலான ஒவர்ல்ட் ட்ரீம் கப்பலில் ஒருவருக்கு கொவிட்-19 இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்தக் கப்பல் சிங்கப்பூருக்கு மீண்டும் திரும்பியது.

நான்கு பகல், மூன்று இரவுகள் நீடிக்க வேண்டியிருந்த கப்பல் பயணம் நிறுத்தப்பட்டது. 1, 646 பயணிகளும் 1,294 பணியாளர்களும் இருந்த அந்தக் கப்பல் இன்று காலை 6.30 மரீனா பே சொகுசு கப்பல் நிலையத்திற்குத் திரும்பியது.

நேற்று கண்டுபிடிக்கப்பட்ட புதிய நோயாளி ஒருவருடன் கப்பலில் இருந்த 40 வயது பயணி நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்ததை அடுத்து அந்தப் பயணி கப்பலின் மருத்துவ நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா கிருமி இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுற்றுலாத் துறை கழகத்தின் இயக்குநர் என்னி சாங் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இரண்டு கொவிட்-19 தடுப்பூசிகளுமே போடப்பட்டிருந்தது.