சிங்கப்பூரின் ராப் கலைஞர் யங் ராஜாவின் இசை, அமெரிக்காவின் 'தி டுனைட் ஷோ' நிகழ்ச்சியில் ஒளியேறியது.
இருந்தபோதும் யங் ராஜாவின் 'மாமி' என்ற பாடலை அந்நிகழ்ச்சியின் படைப்பாளர் ஜிம்மி ஃபெல்லன் கேலி செய்தார். ' கேட்கக் கூடாத பாடல்கள்' என்ற நிகழ்ச்சி அங்கத்தில் யங் ராஜாவின் அந்தப் பாடல் சேர்க்கப்பட்டது.
ஃபெல்லனுக்குப் பாடல் பிடிக்கவில்லை என்றாலும் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தபோது அங்கிருந்த 'குவெஸ்ட்லவ்' என்ற அந்த இசைக்கலைஞர், உடலை அசைத்துக்கொண்டிருந்ததை யங் ராஜா தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறிப்பிட்டார்.

