பயணிக்கு கொவிட்-19; திரும்பி வந்தது உல்லாசக் கப்பல்

2 mins read
5d249a7e-54d8-4774-83e3-f8ed86fb0299
'டிரீம் குருசஸ்' உல்லாசக் கப்பலில் பயணி ஒருவருக்கு கொவிட்-19 இருப்பது உறுதியாகியதை அடுத்து பயணிகளுடன் மரினா பே குருஸ் சென்டரில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உல்­லா­சக் கப்­ப­லில் புறப்­பட்ட பயணி­கள், சற்று முன்­ன­தா­கவே திரும்ப வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 'டிரீம் குரு­சஸ்' நிறு­வ­னத்­தின் 'வேர்ல்டு டிரீம்' கப்­ப­லில் பய­ணம் செய்த 40 வய­துப் பய­ணிக்கு கொவிட்-19 உறு­தி­செய்­யப்­பட்­டதே இதற்­குக் கார­ணம்.

இந்த நான்கு நாள், மூன்று இர­வுக் கப்­பல் பய­ணத்­தில் 1,645 பயணி­களும் 1,249 சிப்­பந்­தி­களும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று புறப்­பட்­டனர். நேற்று காலை ஒன்­பது மணிக்­குத் திரும்ப வேண்­டிய கப்­பல், சற்று முன்­ன­தாக 6.30 மணிக்­கெல்­லாம் மரினா பே குருஸ் சென்­ட­ருக்­குத் திரும்­பி­விட்­டது.

கொவிட்-19 உறு­தி­செய்­யப்­பட்ட ஒரு நோயா­ளி­யின் நெருங்­கிய தொடர்­பு­டை­ய­வ­ராக அந்­தப் பயணி அடை­யா­ளம் காணப்­பட்­டதை அடுத்து, உடனே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

பின்­னர், அந்­தப் பய­ணிக்­குக் கப்­ப­லி­லேயே கொவிட்-19 பரி­சோதனை செய்­யப்­பட்­டது. அதில், அவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

கப்­பல் புறப்­படும் நாளன்று கட்­டாய 'ஆன்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­தனை'யை அப்பயணி செய்­து­கொண்­டார். ஆனால், அவ­ருக்­குத் தொற்று இல்லை என்று அந்­தப் பரி­சோ­தனை முடிவு காட்­டி­யது.

இந்­நி­லை­யில், கிரு­மித்­தொற்றை நன்கு உறு­திப்­ப­டுத்­திட பய­ணிக்­கா­கவே சிறப்­பாக உரு­வாக்­கப்­பட்ட பாதை வழி அவர் தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

இதை­ய­டுத்து, அந்­தப் பய­ணிக்கு கொவிட்-19 உறுதி என்று சுகா­தார அமைச்­சும் நேற்று அறி­வித்­தது. பய­ணிக்கு கொவிட்-19 இருப்­பது குறித்­துக் கப்­ப­லில் இருந்த அனை­வ­ருக்­கும் அறி­விப்பு மூலம் தெரி­விக்­கப்­பட்­டது.

கேடிவி கூடங்­கள், இர­வு­வி­டுதி­கள் தொடர்­பில் சிங்­கப்­பூ­ரில் பெரி­தாகி வரும் கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­டன் கப்­பல் பய­ணிக்­குத் தொடர்பு உள்­ள­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

அடை­யா­ளம் காணப்­பட்ட பயணி­யு­டன் வந்­தி­ருந்த மூன்று பேர், கப்­ப­லில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். இவர்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே பய­ணி­கள் இன்­னும் கப்­ப­லி­லி­ருந்து வெளி­யேற முடி­யாத நிலை­யில் உள்­ள­னர்.

கொவிட்-19 உறு­தி­செய்­யப்­பட்ட பய­ணி­யு­டைய தொடர்­பு­க­ளின் தடம் அ­றி­யும் பணி முடி­வ­டைந்த பின்­, பய­ணி­கள் வெளி­யேற்­றப்­ப­டு­வர்.