கொவிட்-19 பரிசோதனை செய்வதில் ரகசியம் காக்கப்படும்

கொவிட்-19 பரிசோதனை செய்வதில் ரகசியம் காக்கப்படும்

2 mins read
9e4c26ab-71f9-45c5-8677-7733cd3ae865
-

அண்­மை­யில் 'கேடிவி' கூடங்­க­ளுக்­குச் சென்­ற­வர்­கள், அங்­குள்ள உப­ச­ரிப்­புப் பணி­யா­ளர்­க­ளு­டன் கலந்­து­ற­வா­டி­ய­வர்­கள் ஆகி­யோ­ருக்­காக நடை­பெற்று வரும் கொவிட்-19 பரி­சோ­த­னைச் செயல்­முறை, ரக­சி­ய­மாக வைத்­துக்­கொள்­ளப்­படும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார்.

ஊட­கங்­க­ளுக்கு நேற்று பேட்டி­­அளித்­த­போது திரு ஓங் இவ்­வாறு கூறி­யி­ருந்­தார். கூடங்­க­ளுக்­குச் சென்­ற­வர்­கள் தங்­க­ளை­யும் தங்­களின் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளை­யும் பாது­காத்­துக்­கொள்ள பரி­சோ­தனை நிலை­யங்­க­ளுக்­குச் செல்­வ­தற்­காக முன்­ப­திவு செய்­தி­டு­மா­றும் அவர் அறி­வு­றுத்­தி­னார். பரி­சோதனை செயல்­முறை, ரக­சி­யத்­தன்­மை­யு­டன் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக வலி­யு­றுத்­தி­னார் அமைச்­சர்.

"கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை அடை­யா­ளம் கண்டு சமூ­கப் பாது­காப்­புக்­காக அவர்­களை உடனே தனி­மைப்­ப­டுத்த வேண்­டும். அதற்கே தற்­போது முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கிறது," என்­றார் திரு ஓங்.

இந்­நி­லை­யில் ஒரு சில­ருக்­குப் பரி­சோ­தனை நிலை­யங்­க­ளுக்­குச் சென்று பரி­சோ­தனை செய்­து­கொள்­வ­தில் தயக்­கம் ஏற்­ப­ட­லாம் என்­றும் குறிப்­பிட்­டார் அவர்.

இவர்­கள் முடிந்­த­வரை தங்­களைத் தாங்­களே தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­வ­து­டன் 'ஆன்­டி­ஜன் விரைவு பரி­சோ­தனை'யைத் தங்­களின் குடும்ப உறுப்­பி­னர்­கள் வாங்கி வரச் செய்­ய­லாம் என்று ஆலோ­சனை கூறி­னார். அடுத்த 14 நாட்­க­ளுக்­குத் தங்­க­ளின் உடல்­நலத்­தைக் கண்­கா­ணிப்­ப­து­டன் பிற­ரு­டன் கலந்­து­ரை­யா­டு­வ­தை­யும் தவிர்க்க வேண்­டும் என்று குறிப்­பிட்­டார்.

"வரும் நாட்­களில் உங்­க­ளுக்கு உடல்­ந­ல­மில்­லா­மல் போனால், உடனே ஒரு மருந்­த­கத்­திற்­குச் செல்­லுங்­கள், மருத்­து­வ­ரைப் பாருங்­கள், பரி­சோ­தனை செய்­து­கொள்­ளுங்­கள். அப்­போ­து­தான் நம்­மால் உடனே கண்­டு­பி­டிக்க முடி­யும்," என்று அமைச்­சர் ஓங் வலி­யு­றுத்­தி­னார்.

சமூகத்தில் நேற்று 56 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது. அவர்­களில் கேடிவி கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் 41 பேர் எனும் நிலை­யில் அமைச்­சர் ஓங் இவ்­வாறு கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

கேடிவி கூடங்­கள் தொடர்­பில் கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் உரு­வாகிய நிலை­யில், ஜூன் 29 முதல் இக்­கூ­டங்­க­ளுக்­குச் சென்­ற­வர்­களுக்கு இல­வச கொவிட்-19 பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.