'தடுப்பூசி போட்டுக்கொள்ள மூத்தோருக்கு அறிவுறுத்துங்கள்'

1 mins read
d680a5be-211a-4f77-b5a0-22eb6cc03da1
-

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சியை முதி­ய­வர்­கள் போட்­டுக்­கொள்ள அறி­வு­றுத்­து­மாறு அனைத்து தனி­யார் மருத்­து­வர்­கள் மற்­றும் அடிப்­ப­டைப் பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்­குக் கடி­தம் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக, 70 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்­பதை ஊக்­கு­விக்­கும் வகை­யில் இவ்­வாறு கடி­தங்­கள் அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் மற்­றும் சிங்­கப்­பூ­ரின் மருத்­து­வச் சேவை­கள் இயக்­கு­நர் கென்­னத் மாக் நேற்று அறி­வித்­த­னர்.

அத்­து­டன் கடி­தங்­களில் இணைப் பேரா­சி­ரி­யர் மாக் கையெ­ழுத்­தும் இட்­டி­ருந்­தார்.

தனி­யார் மருத்­து­வர்­கள், அடிப்­படை பரா­ம­ரிப்பு வழங்­கு­வோர், தொண்­டூ­ழி­யர்­கள், துணை மருத்துவ நிபு­ணர்­கள் ஆகிய அனை­வ­ரி­ட­மும் இதற்­காக உதவி கோரு­வ­தாக திரு ஓங் குறிப்­பிட்­டார்.

சமூ­கத்­தில் உள்ள முதி­ய­வர்­க­ளைச் சென்­ற­டைய வேண்­டும் என்­ப­தற்­காக மூத்த தலை­முறை தொண்டூழியர்­களும் களத்­தில் இறக்­கப்­ப­டு­வர் என்று அவர் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சியை முதி­ய­வர்­கள் போட்­டுக்­கொள்­வதை ஊக்­கு­விக்க, நட­மா­டும் தடுப்­பூசி மையங்­களை சுகா­தார அமைச்சு நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது. 70 வய­துக்கு மேற்­பட்­டோ­ரில் சுமார் 29 விழுக்­காட்­டி­னர் இன்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

"நான் வெளியே போகா­மல் இருக்­கும்­வரை பாது­காப்­பாக இருக்­கி­றேன் என்று நீங்­கள் நினைக்­க­லாம். ஆனால், டெல்டா உரு­மா­றிய கிருமி அப்­ப­டி­யல்ல," என்­றார் அமைச்­சர். தடுப்­பூசி இன்றி கிருமி தொற்­றும் சாத்­தி­யம் அதி­கம் என்­றார் அவர்.