அடுத்த இரு வாரங்களில் 'ரெட் லயன்ஸ்' பயிற்சி

அடுத்த இரு வாரங்களில் 'ரெட் லயன்ஸ்' பயிற்சி

1 mins read
013492e1-4537-4ab8-b0df-d5f9b390d5e6
தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது சென்ற ஆண்டு இங் டெங் ஃபோங் மருத்துவமனை அருகே திடலில் தரையிறங்கிய 'ரெட் லயன்ஸ்' வீரர். கோப்புப்படம் -

தேசிய தினக் கொண்­டாட்­டத்தை முன்­னிட்டு அடுத்த மாதம் 7, 8 ஆகிய தேதி­களில் சிங்­கப்­பூ­ரின் வெவ்­வேறு குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­களில் செஞ்­சிங்­கங்­கள் எனும் 'ரெட் லயன்ஸ்' வான்­குடை சாகச வீரர்­கள் தரை­யி­றங்க உள்­ள­னர். தாங்­கள் தரை­யி­றங்க, அந்­தந்­தப் பகு­தி­கள் ஏற்­பு­டை­ய­வை­தானா என்­பதை மதிப்­பிட, அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு தீவின் பல பகு­தி­களில் வீரர்­கள் பயிற்சி மேற்­கொள்ள­வுள்­ள­னர்.

இது குறித்து நேற்று அறி­வித்த சிங்­கப்­பூர் ஆயு­தப் படை, "மதிப்­பீட்­டுக்­காக வீரர்­கள் இவ்­வாறு குதிப்­ப­தைக் கண்டு அதிர்ச்சி அடைய வேண்­டாம் என்று பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றோம். மேலும் பாது­காப்பு கருதி தடுப்­பு­கள் போடப்­பட்ட பகு­தி­க­ளுக்­குள் வர வேண்­டாம் என்­றும் கேட்­டுக்­கொள்­கி­றோம்," என்­றது.

வான்­வெளி சாக­சக் காட்­சி­யின் ஓர் அங்­க­மாக இவ்­வாண்டு சிங்­கப்­பூர் ஆகா­யப் படை­யின் போர் விமா­னங்­களும் சினூக் ஹெலி­காப்­டர்­களும் குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­களைத் தாண்­டிப் பறக்­கும் என்று முன்­னரே கூறப்­பட்­டது.

சில குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் வாண­வே­டிக்­கை­களும் இடம்­பெ­றும்.

மரினா பே மிதக்­கும் மேடை­யில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி­யன்று அணி­வ­குப்பு நிக­ழ­வுள்­ளது.

நுழை­வுச்­சீட்­டு­கள் குலுக்­கல் முறை­யில் பொது­மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வந்­தது. ஆனால் இவ்­வாண்டு தனிப்­பட்ட அழைப்­பின் அடிப்­ப­டை­யில் மட்­டுமே அணி­வகுப்­பைப் பார்க்க முடி­யும்.

பார்­வை­யா­ளர்­கள் ஆகஸ்ட் 9ஆம் தேதி­யன்று நிகழ்­வுக்கு முன்­ன­தாக கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர்.