மேலும் 140,000 பேருக்கு வேலை

மேலும் 140,000 பேருக்கு வேலை

2 mins read
42c29928-7f3e-4a1c-90fa-3e5e343b5130
-

வேலை வளர்ச்சி ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் கிடைத்தது

உள்­ளூர் ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்த முத­லா­ளி­களுக்கு உத­வும் அர­சாங்க திட்­டத்­தின்கீழ் சென்ற ஆண்டு நவம்­பர் முதல் மேலும் 140,000 உள்­ளூர்­வா­சி­க­ளுக்கு புதிய வேலை­கள் கிடைத்­துள்­ளன.

மனி­த­வள அமைச்சு நேற்று இதனை அறி­வித்­தது. இந்த ஆண்டு பிப்­ர­வரி நில­வ­ரப்­படி, 42,000 நிறு­வ­னங்­கள் 270,000 சிங்­கப்­பூர் குடி­மக்­க­ளை­யும் நிரந்­த­ர­வாசி­க­ளை­யும் வேலை­யில் சேர்த்­தன. இதற்கு வேலை ஆத­ரவு ஊக்கு­விப்­புத் திட்­டம் உத­வி­யது.

வேலை பெற்ற சிங்­கப்­பூ­ரர்­களில் ஏறத்­தாழ பாதிப் பேர், வேலை கிடைத்த நேரத்­தில் வேலை­யின்றி இருந்­த­னர். மூன்­றில் ஏறத்­தாழ ஒரு பங்­கி­னர் ஆறு மாதத்­திற்­கும் மேற்­பட்ட காலம் வேலை இல்­லா­ம­லேயே இருந்து வந்­த­னர். ஏறக்­கு­றைய 60 விழுக்­காட்­டி­னர் வேறு துறை­யில் முன்பு வேலை பார்த்­த­னர்.

வேலை வளர்ச்சி ஊக்­கு­விப்­புத் திட்­டம் இந்த ஆண்டு செப்­டம்­பர் வரை நீட்­டிக்­கப்­ப­டு­கிறது. உள்­ளூர் ஊழி­யர்­களை வேலை­யில் சேர்க்­கும் நிறு­வ­னங்­கள், ஓராண்டு காலத்­திற்கு ஊழி­யர்­க­ளின் மொத்த மாதச் சம்­ப­ளத்­தில் முதல் $5,000ல் 25 விழுக்­காடு மானி­யத்தைப் பெற இத்திட்டம் உதவும்.

இந்­தத் திட்­டத்­தின்கீழ் வேலை­களை உரு­வாக்­கிய நிறு­வ­னங்­களில் 99 விழுக்­காடு சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­தார். ஏறக்­கு­றைய பாதி நிறு­வனங்­கள் ஒன்று அல்­லது இரண்டு உள்­ளூர் ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்­தின.

மற்ற நிறு­வ­னங்­கள் இரண்டு ஊழி­யர்­க­ளுக்­கும் மேற்­பட்­ட­வர்­களை வேலை­களில் சேர்த்­தன.

டாக்­டர் டான், ஜூரோங் பறவைப் பூங்­கா­வில் அமைந்­தி­ருக்­கும் 'சோஷி­யல் கிச்­சன்' உண­வ­கத்­திற்­குச் சென்­றி­ருந்­தார். அதற்கு பிறகு அவர் மெய்­நி­கர் ரீதி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

வேலை தொடர்­பான ஆகப் புதிய புள்­ளி­வி­வ­ரங்­கள் நம்­பிக்கை ஊட்­டு­வ­தா­க­வும் மகிழ்ச்சி அளிப்­ப­தா­க­வும் மறு­உ­றுதி அளிப்­ப­தா­க­வும் அமைச்சர் தெரி­வித்­தார்.

புதிய வேலை­களில் பெரும்­பா­லா­னவை மொத்த வர்த்­த­கம், நிபுணத்­து­வச் சேவை­கள், தக­வல் தொடர்பு ஆகி­யவை போன்ற வளரும் துறை­களில் உரு­வாக்­கப்­பட்­டன என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார். புதிய வேலை­களில் 20% வேலை­கள், உணவு சேவை, சில்­லறை வர்த்­தகத் துறை­க­ளைச் சேர்ந்­த­வை­யாக இருந்­தன.

அர­சாங்க ஆத­ர­வைப் பயன்­படுத்­திக்கொண்டு ஊழி­யர்­க­ளின் தேர்ச்­சி­க­ளைப் புதுப்­பித்து மேம்­படுத்­தும்படி முத­லா­ளி­களை அமைச்­சர் வலி­யு­றுத்­தினார்.

மாறி­க்கொண்டே இருக்­கின்ற சூழ­லில் ஒரு வேலைக்கு நூற்­றுக்கு­நூறு பொருத்­த­மான ஊழி­ய­ரைக் காண்­பது என்­பது சிர­ம­மா­ன­தாக இருக்­கக்­கூ­டும் என்­பதை டாக்­டர் டான் சுட்­டி­னார். இருந்­தா­லும் திறந்த மன­து­டன் நல்ல ஊழி­யர்­களை அமர்த்தி அவர்­க­ளுக்­கு முதலாளிகள் பயிற்சி அளிக்க முடியும் என்று தான் நினைப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.