ஜூனில் தனியார் வீடு வாடகையில் மாற்றமில்லை

ஜூனில் தனியார் வீடு வாடகையில் மாற்றமில்லை

2 mins read
15151fb7-6700-4e4b-885f-0833fa2d157a
-

தனி­யார் அடுக்­கு­மாடி வீடு­க­ளுக்­கான வாட­கை­யில் ஜூன் மாதம் மாற்­றம் இல்லை. அதே­வே­ளை­யில், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்கு­மாடி வீடு­க­ளுக்­கான வாடகை மே மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் ஜூன் மாதத்­தில் 1% கூடி­யது.

எஸ்­ஆர்­எக்ஸ் நிலச்சொத்து இணையவாசல் மூலம் இந்­தப் புள்ளி­வி­வ­ரங்­கள் தெரி­ய­வ­ரு­கின்­றன.

வாட­கைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட தனி­யார் கூட்­டு­ரிமை வீடு­களும் வீவக வீடு­களும் தொடர்ந்து மூன்­றாவது மாத­மாக ஜூனில் அதி­க­மாக இருந்­தன.

ஆண்டு அடிப்­ப­டை­யில் கூட்­டுரிமை அடுக்­கு­மாடி வீடு­க­ளுக்­கான வாடகை 2020 ஜூன் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்டு ஜூனில் 8 விழுக்­காடு கூடி­யது. மாறாக, வீவக வீட்டு வாடகை தொடர்ந்து 12வது மாத­மாக ஜூன் மாத­மும் அதி­க­ரித்­தது.

சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் வீவக வீடு­க­ளுக்­கான வாடகை இந்த ஆண்டு ஜூன் மாதம் 9.2 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

மாத அடிப்­ப­டை­யில், அனைத்து வகை வீவக வீடு­க­ளுக்­கும் உரிய வாடகை ஜூனில் கூடி­யது. இருந்­தா­லும் எக்­ஸி­கி­யூட்­டிவ் வீடு­க­ளுக்­கான வாட­கை­யில் மாற்­ற­மில்லை.

முதிர்ச்சி அடை­யாத பேட்­டை­களில் உள்ள வீவக வீடு­க­ளுக்­கான வாடகை 1.9 விழுக்­காடு அதி­கரித்­தது. அதே நேரத்­தில் முதிர்ச்சி அடைந்த பேட்­டை­களில் உள்ள வீவக வீடு­க­ளுக்­கான வாடகை 0.1 விழுக்­கா­டு­தான் கூடி­யது.

ஜூன் மாதம் கூட்­டு­ரிமை அடுக்கு­மாடி வீடு­களை அதி­கம் பேர் வாட­கைக்கு எடுத்­த­னர். ஜூனில் இத்­த­கைய 5,468 வீடு­கள் வாட­கைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­தாக மதிப்­பி­டப்­ப­டு­கிறது.

இந்த எண்ணிக்கை மே மாதம் 5,083 ஆக இருந்தது. ஜூன் மாதம் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கை 2.9 விழுக்காடு அதிகரித்து 1,910 ஆக இருந்தது.