மக்கள் முன்வந்து பழகுவது இன நல்லுறவுக்கு வழிகோலும்

பாகு­பா­டும் விருப்புகளும் உள்ள உல­கில், தனி­ந­பர்­கள் எப்­படி முதல் அடி எடுத்­து­வைத்து மற்­ற­வர்­க­ளு­டன் பழ­கு­கி­றார்­கள் என்­ப­தைப் பொறுத்தே சிங்­கப்­பூரில் இன நல்லுறவு மேம்படக்கூடும்.

இனம், இன­வா­தம் ஆகி­யவை பற்றி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்­பாடு செய்த இணைய வழி கருத்­த­ரங்­கில் அந்­தக் கருத்தை முன்­வைத்­தார் கலா­சா­ரம், சமூ­கம், இளை­யர்த்­துறை அமைச்­ச­ரும் இரண்­டாம் சட்ட அமைச்­ச­ரு­மான திரு எட்­வின் டோங். ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்­தும் மாதாந்­திர இணை­ய­வழி கருத்­த­ரங்­கு­களில் அது­வும் ஒன்று.

அக்­கம்­பக்­கத்­தா­ரி­டம் தின­மும் காட்­டும் கனி­வி­லி­ருந்து பாடங்­கள் கற்­றுக்­கொள்­ள­லாம் என்­றார் திரு டோங்.

வேறு இனம், கலா­சா­ரம், பின்­ன­ணி­யைச் சேர்ந்­த­வர்­க­ளைப் பற்றி இன்­னும் அதி­க­மா­கத் தெரிந்­து­கொள்­ளும்­போது, அவர்­க­ளைப் பற்றிய அக்­கறை அதி­க­மா­கும். அவர்­களை ஏற்­றுக்­கொள்­ளும் மனப்­பான்மை ஏற்­படும், என்று திரு டோங் கூறி­னார்.

நேற்­றைய நிகழ்ச்­சி­யில் அமைச்­ச­ரு­டன் நாடா­ளு­மன்ற நிய­மன உறுப்­பி­னர் டாக்­டர் ஷாஹிரா அப்­துல்லா, தமிழ் முர­சின் செய்தி ஆசி­ரி­ய­ரும் மின்­னி­லக்க ஆசி­ரி­ய­ரு­மான தமி­ழ­வேல், ஹேஷ்.பீஸ் அமைப்­பின் பொதுச் செய­லா­ளர் லெ­னார்ட் சிம், அடித்­தள அமைப்பு செயல்­பாட்­டா­ளர் ஹஃபீஸ் சொரோரி ஸஞ்­சானி ஆகி­யோ­ரும் பங்­கேற்­ற­னர்.

"இனம் வேறு­ப­டு­வ­தைப் போல நமக்கு விருப்­பு­வெ­றுப்­பு­களும் சார்­பு­களும் உண்டு. ஒரே மாதி­ரி­யான விருப்பு வெறுப்­புள்­ள­வர்­க­ளு­டன் ஒட்­டிப் பழ­கு­வது மனி­த­ம­னத்­தின் தன்மை." என்றார் திரு டோங்.

அதே நேரத்­தில் சார்­பு­களும் விருப்­பு­களும் வேறு, எதிர்­மறை போக்கு என்­பது வேறு என்­றும் பாகு­பா­டு­ அதனைவிட சற்று வேறு­ ப­டு­கிறது என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இனம், இன­வா­தத்­தைக் களைய என்ன செய்­ய­லாம் என நெறி­யா­ள­ரும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் சிங்­கப்­பூர் ஆசி­ரி­ய­ரு­மான திரு ஸாக்­கிர் ஹுசேன் கேட்ட கேள்­விக்கு, அக்­கம்­பக்­கம் உற­வு­களை நெருக்­க­மாக்­கும் நிகழ்ச்­சி­க­ளைச் சுட்­டி­னார். தமது ஜூ சியாட் தொகு­தி­யைச் சேர்ந்த ஓப்­பரா எஸ்­டேட்­டில் அமைந்­துள்ள ஜாலான் பிந்­தாங் தீகா­வில் தேசிய தினத்தை ஒட்டி ஒவ்­வோர் ஆண்­டும் நடத்­தப்­படும் வீதி கேளிக்கை நிகழ்ச்சி, அக்­கம்­பக்க உர­சல்­க­ளைக் குறைக்க உத­வி­யுள்­ள­தாக திரு டோங்­ சொன்­னார்.

இன நல்­லி­ணக்­கத்­தைப் பேண சட்­டங்­கள் உள்­ள­போ­தும், மக்­களே அதற்­கான பணி­யைக் களத்­தில் செய்ய வேண்­டும் என்­றார் அவர்.

அக்­கம்­பக்­கத்­தாரை மின்­தூக்­கி­யில் பார்க்­கும்­போது வணக்­கம் கூறுவது போன்ற சமூக வழக்­கங்­களை பெற்­றோர் தங்­கள் பிள்­ளை­ க­ளுக்­குக் கற்­றுத் தரு­வ­தும் ஒரு வழி என்ற தமிழ் முர­சின் திரு தமி­ழ­வேல், விளை­யாட்­டின் வழி­யும் மக்­களை ஒன்­று­ப­டுத்­த­லாம் என்று யோசனை கூறி­னார்.

மற்ற இனங்கள் பற்றிய புரிதலை மேம்படுத்த தங்கள் கலாசாரம் பற்றிய கேள்விகளை எதிர்கொள்ள பிள்ளைகளைத் தயார்ப்படுத்த வேண்டும் என்றார் செயல் பாட்டாளர் திரு ஹஃபீஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!