எட்வின் டோங்: சுய உதவிக் குழுக்கள், இனவகைத் தரவுகள் இன்னமும் தேவை

எட்வின் டோங்: சுய உதவிக் குழுக்கள், இனவகைத் தரவுகள் இன்னமும் தேவை

2 mins read
88db0886-bbdb-4e78-adb9-45869a44e803
-

இன ரீதி­யான வகைப்­ப­டுத்­த­லையோ இனம் சார்ந்த சுய உத­விக் குழுக்­க­ளையோ நீக்­கு­வ­தால் சிங்­கப்­பூ­ரின் வெவ்­வேறு இனங்­க­ளுக்­கி­டையே உள்ள வேறு­பா­டு­களும் நீங்­கி­வி­டும் என்­றில்லை என்று கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங் கூறி­னார்.

சமூ­கத்­தைத் தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்கு பதி­லாக, இன ரீதி­யான வகைப்­ப­டுத்­த­லும் சுய உத­விக் குழுக்­களும் அதி­கா­ரி­க­ளுக்கு செயல்­தி­றன்­கள், விளை­வு­கள் குறித்து மேலும் மேம்­பட்ட அறி­கு­றி­க­ளை எடுத்துக்காட்­டும் என்­றும் வளங்­களை மேலும் சிறப்­பாக வழங்­கு­வ­தற்­கு உத­வு­ம் என்றம் அவர் கூறி­னார்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் நேற்று நடத்­திய இணைய கலந்­து­ரை­யா­ட­லில் அமைச்­சர் பேசி­னார்.

இனம் சார்ந்த சய உத­விக் குழுக்­கள் இன்­றும் பொருத்­த­மா­ன­வையா, அவை வெவ்­வேறு இனங்­களை மேலும் தனி­மப்­ப­டுத்­தாதா எனும் கேள்­விக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்டு சங்­கம் (சிண்டா), சீன மேம்­பாட்டு உதவி மன்­றம், யாயா­சான் மெண்­டாக்கி, யூரே­சி­யர் சங்­கம் ஆகிய நான்கு சுய உத­விக் குழுக்­கள் உள்­ளன.

கலந்­து­ரை­யா­ட­லில் கலந்­து­கொண்ட தமிழ் முர­சின் செய்தி ஆசி­ரி­ய­ரும் மின்­னி­லக்க ஆசி­ரி­ய­ரு­மான திரு தமி­ழ­வேல் இனம் சார்ந்த சுய உத­விக்­கு­ழுக் கள் தேவை இல்­லாத நிலை ஒரு­நாள் வரும் என்று விரும்பி அதை நோக்கி செயல்­ப­ட­லாம் என்­றா­லும் தற்­போ­தை­ய சூழ­லில் ஒவ்­வொரு இனத்­தின் தனித்­தன்­மை­க­ளை­யும் சிறு சிறு வித்­தி­யா­சங்­க­ளை­யும் விரி­வா­கப் புரிந்­து­கொண்டு பிரச்­சி­னை­களை மேலும் சிறப்­பா­கக் களைய அவை தேவை என்­றார்.

"இந்­திய சமூ­கமே ஒரே­வி­த­மா­ன­தல்ல; மொழி, சமய வேற்று மைகளைக் கொண்டது. தற்­போ­தைய சூழ­லில் இனம் சார்ந்த சுய உதவி குழுக்­கள் தேவை­தான். மேலும் சுய உத­விக் குழுக்­கள் அந்­தந்தச் சமூ­கத்­திற்கு மட்­டும் சேவை ஆற்­று­வ­தில்லை, மற்ற இனத்­த­வ­ரை­யும் அர­வணைத்து செயல்­ப­டு­கின்­றன" என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.