மின்னிலக்கம் வழி பாலியல் தொல்லை: பாதிக்கப்பட்டோருக்கு இணையத்தளம்
மின்னிலக்கத் தொழில்நுட்பம் சார்ந்த பாலியல் துன்புறுத்தல் அனுபவிப்போருக்குத் தகவல்களும் வழிகாட்டுதலும் அளிக்க புதிய இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் கடந்த ஆண்டு அதிகரித்ததைத் தொடர்ந்து இரு ஆய்வாளர்கள், பாலியல் சமத்துவத்தை வலியுறுத்தும் அவேர் அமைப்புடன் இணைந்து 'சோலிட் கிரவுன்ட்' (Solid Ground) எனும் அந்த இணையத்தளத்தைத் தொடங்கியுள்ளனர்.
தனது பாலியல் வன்செயல் பராமரிப்பு நிலையம் கடந்த ஆண்டு தொழில்நுட்பம் சார்ந்த பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 191 வழக்குகளைச் சந்தித்தது என்று அவேர் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. இது 2019ஆம் ஆண்டிலிருந்த 140 வழக்குகளைவிட 36% அதிகம். இத்தகைய சம்்பவங்களை கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அவேர் அமைப்பு கண்காணித்து வருகிறது. அதில் கடந்த ஆண்டின் எண்ணிக்கைதான் ஆக அதிகம்.
மறதிநோய் உள்ள தாயைத் தாக்கிய நபருக்கு 4 மாதச் சிறைத்தண்டனை
மறதிநோய் உள்ளதோடு சக்கரநாற்காலியில் இருக்கும் தமது 84 வயது தாயாரைத் தாக்கிய குற்றத்துக்காக 64 வயது நபருக்கு 4 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
லிம் ஹெங் சூன், திருவாட்டி இங் கங் ஹுவே எனும் அவர் தாயாரைத் தாக்கியதாக கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி சாய் சீயில் உள்ள லிம்மின் வீட்டுக்கு தாயாரும் அவரது இல்லப் பணிப் பெண்ணும் சென்றனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வெளியே சென்ற தாயாரின் சக்கர நாற்காலியை லிம் மூன்று முறை தள்ளிவிட்டார். மூதாட்டி கீழே விழுந்ததும் அவர் முடியைப் பிடித்து இழுத்ததோடு, காலணியால் தாக்கினார்.

